Tuesday, May 22, 2012

நியூயார்க் சர்வதேச பட விழாவுக்கு ‘3’ படம் தேர்வானது


தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த 3படம் சமீபத்தில் ரிலீசானது. தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் இப்படம் வந்தது. 3படத்துக்கு எதிர்பார்த்த வசூல் இல்லாததால் நஷ்டமடைந்து விட்டதாக தெலுங்கு விநியோகஸ்தர் நட்டிகுமார் குற்றம் சாட்டினார். போலீசிலும் புகார் செய்தார்.

இந்த சர்ச்சையால் மனம் உடைந்து இருந்த ஐஸ்வர்யாவுக்கு 3படம் நியூயார்க்கில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்விழாவில் ஆடுகளம், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட மேலும் சில தமிழ் படங்களும் திரையிடப்படுகிறது. திரைப்பட விழாவில் பங்கேற்க ஐஸ்வர்யா நியூயார்க் செல்கிறார். அவர் கூறியதாவது:-

நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 3படம் திரையிடப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புது இயக்குனரான என்னை அவ்விழாவில் கவுரவிக்க இருக்கிறார்கள். சர்வதேச அளவுக்கு 3படம் போய் இருப்பது பெருமை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment