Tuesday, May 22, 2012

அரவான் நஷ்டத்தை ராட்டினம் சரிகட்டிய கதை!!


சமீபமாக அரவான் படத்தை வாங்கி வெளியிட்டு சற்றே கையை சுட்டுக் கொண்ட வேந்தர் மூவீஸ் எஸ்.மதன்., கடந்த வெள்ளியன்று வெளிவந்துள்ள புதுமுகங்களின் ராட்டினம் படத்தை வாங்கி வெளியிட்டிருப்பதின் மூலம் அரவான் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டி விடுவார் என்கின்றனர் ராட்டினம் பார்த்த கோடம்பாக்கத்தின்ர் பலரும்!
படம் அத்தனை "நச்சென்று வந்திருப்பதாக கூறும் அவர்களுக்கு தெரியுமா? வேந்தர் மூவீஸ் எஸ்.மதனுக்கு முன்பே இந்தப்படத்தை அழகர்சாமியின் குதிரை மதன் வாங்கி வெளியிட பேசிவந்ததும் அவரை ஆஃப் செய்து வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் சுமார் 3 கோடி கொடுத்து ராட்டினம் படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார் என்பதும். எப்படியோ அழகர்சாமியின் குதிரை நஷ்டத்தை சரிகட்ட வேண்டிய ராட்டினம், அரவான் நஷ்டத்தை சரிகட்ட இருக்கிறது அவ்வளவுதான்! அப்படித்தானே?!


No comments:

Post a Comment