விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, May 1, 2012

    காதல் : அஜீத் - ஷாலினி



    ஏய்...’ என்ற அலறலோடு அஜீத் கத்தியைக் காற்றில் வீச, எதிரே இருந்த ஷாலினியின் வலது கையில் ரத்தக் கோடு. 'கட்... கட்...’ பதறிப்போனது மொத்த யூனிட்டும்.

    திட்டமிட்ட காட்சி அதுதான். ஆனால், நிஜமாகவே ஷாலினி யின் கையைக் கத்தி பதம்பார்த்துவிட்டது எதிர்பாராத திருப்பம். ரத்தம் பார்த்த அஜீத் படபடப்பாகிவிட்டார் தாம்தூம் என்று ஆர்ப்பாட்டம் செய்து, அடுத்த சில நிமிடங்களில், படப்பிடிப்புத் தளத்துக்கு ஒரு ஆஸ்பத்திரியையே கொண்டுவந்துவிட்டார்.

    வலியால் கத்தித் தீர்க்க வேண்டிய ஷாலினி, 'நோ பிராப்ளம்’ என்பதுபோல அமைதியாக இருந்தார்.

    ''ஷாலினியின் அந்த நிதானம், என்னை ஆழமாகப் பாதித்துவிட்டது. 'ஒரு பெண்ணால் இத்தனை அமைதியாகப் பிரச்னையை எதிர்கொள்ள முடியுமா?’ என்று ஆச்சர்யமாக இருந்தது!''- இப்போது சொல்கிறார் அஜீத்.

    ''அடுத்தவருக்குச் சிறு துன்பம் என்றால் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுமா? தான் யார், தன்னுடைய நிலை என்ன... என்பதை எல்லாம் விட்டுவிட்டு, முகத்தில் பதற்றமும் மனதில் அக்கறையுமாக ஒருவரால் அல்லாட முடியுமா என்று வியப்பாக இருந்தது!'' என்று சொல்லும் ஷாலினியின் இதழ் ஓரத்தில் வெட்க இழை!
    எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது இயல்பு தானே... ஷாலினிக்கும் அஜீத்துக்கும் காதல் அரும்பியது அந்தத் தருணத்தில்தான்!

    ''அஜீத்தும் ஷாலினியும் சந்தித்துக்கொண்டதே அந்தத் தினத்தில்தான். அஜீத்தான் ஹீரோ, ஷாலினிதான் ஹீரோயின் என்பதில் உறுதியாக இருந்த நான், கஷ்டப்பட்டு ஷாலினியைச் சம்மதிக்கவைத்து அழைத்து வந்தேன். அஜீத் தனியாக வும் ஷாலினி தனியாகவும் நடித்து முடித்த நிலை யில், அடுத்த ஷெட்யூலில் காம்பினேஷன். முதல் சந்திப்பிலேயே ரத்தம். ஷாலினியின் அப்பா, 'இது நல்ல சகுனம்தான்’ என்றார். எல்லாம் நல்லவித மாகவே முடிந்திருக்கிறது!'' என்றார் 'அமர்க்களம்’ படத்தின் டைரக்டர் சரண்.

    ''ஷாலுவை (ஷாலினியைத்தான் இப்படிச் செல்லமாகக் குறிப்பிடுகிறார்) பார்த்தால் ஆச்சர் யம்தான் மிஞ்சுகிறது. '20 வயதில் ஒரு பெண்ணுக் குள் இத்தனை தீர்க்கமான சிந்தனையா...’ என்று பல நேரங்களில் பிரமித்துப்போயிருக்கிறேன்...'' என்கிறார் அஜீத்.


    ''இதற்கு முன் நான் சந்தித்த பெண்களிடம் காண முடியாத தீர்க்கம் இந்தப் பெண்ணின் பார்வைக்குள்ளும் செயலுக்குள்ளும் ஒளிந்து இருப்பதாக எனக்குத் தோன்றியது. சட்டென்று எனக்குள் ஒரு மின்னல்... 'என் தேடல் இதை நோக்கித்தானோ...’ நேராக ஷாலினியிடம் போய், 'நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்’ என்று சொன்னேன். என்ன பதில் வருமோ என்ற பதற்றம் எனக்கு!'' பேசுவதை நிறுத்தித் தலையைக் கோதிவிட்டபடி, பின்னால் சாய்ந்துகொண்டார் அஜீத்.

    ''அஜீத் என்னிடம் வந்து இப்படிக் கேட்டபோது எனக்குள் பெரிய அதிர்ச்சி எல்லாம் எழவில்லை. சொல்லப்போனால், என் மனமே மெள்ள அஜீத் பக்கம் சாயத் தொடங்கிவிட்டதாகத்தான் உணர்ந்தேன். ஆனால், நான் அப்பா பொண்ணு. அதனால், 'எனக்கு ஓ.கே... அப்பாவிடம் பேசி விடுங்கள்’ என்று சொல்லிவிட்டேன். அப்பாவிடம் அஜீத் பேசும் முன்பே நான் பேசிவிட்டேன். இந்த விஷயத்தில் எல்லோருக்கும் சந்தோஷம்!'' என்றார் ஷாலினி.

    ''எல்லோருக்கும் சந்தோஷம். சரி... ஆனால், ஒரு டைரக்டர் என்ற முறையில் எனக்குப் பெரிய வருத்தம். 'ஷாலினிங்கிற நடிகையை இழந்துட்டோமே’ன்னு. மற்றபடி, நான் அடம்பிடிச்சு சினிமாவில் இவர்களை ஜோடி சேர்த்தது வாழ்க்கையிலும் ஜோடி சேருவதற்குத்தான் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது'' என்றார் சரண்!

    ஆக, இனிமேல் ஷாலினி சினிமாவில் நடிக்கப்போவது இல்லை!


    ''என் ஆசை அதுதான்... நான் ஒரு காட்டாறு மாதிரி யான மனிதன். எதையோ தேடி அருவியாக விழுந்து, பாறைகளில் மோதி, தேவை இல்லாமல் பல விஷயங்களைச் சுமந்துகொண்டு இருக்கிறேன். இப்போதான் எனக்கான கடலைத் தேடிக் கண்டுபிடித்துச் சங்கமம் ஆகிறேன். இந்தக் கடல் என்னைக் கட்டுப்படுத்தவும், சாந்தப்படுத்தவும் உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன்!'' என்றார் அஜீத்.

    ''நடிப்பது என்பது பணத் தேவைக்காகவோ, அதீதப் புகழுக்காகவோ இல்லை. என் சந்தோஷத்துக்காக... இப்போது அடுத்த பொறுப்பு கிடைத்திருக்கிறது. அங்கே மாறிவிட்டேன்''- மெலிதான புன்னகையோடு சொல்கிறார் ஷாலினி.

    ''ஷாலுவைவிட எனக்குத்தான் பொறுப்பு அதிகம். ஷாலுவைத் தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெண்ணாக மதிக்கின்றன. அவர்கள் எல்லோரும் எனக்கும் ஷாலுவுக்கும் நல்வாழ்த்துக்களை அனுப்பி இருக்கிறார்கள். இப்போது நான் தமிழ்நாட்டின் மருமகன்'' என்றார் அஜீத்.

    ''இப்போது எதிர்காலம் பற்றித்தான் அதிகம் பேசிக் கொள்கிறோம். அஜீத்தின் திட்டங்களைச் சொன்னால் பல பெண்களுக்கு என் மேல் பொறாமை வரும்'' என்று பெரிய பீடிகை போட்டார் ஷாலினி.

    ''ஒரு நேரத்தில் ஒரு படம்... 15 நாள் சினிமாவுக்கு... 15 நாள் குடும்பத்துக்கு. இந்தத் தொடையில் ஒன்று, அந்தத் தொடையில் ஒன்று... வலது தோளில் ஒன்று, இடது தோளில் ஒன்று... தலையில் ஒன்று... கழுத்தைக் கட்டிக் கொண்டு முன்பக்கம் ஒன்று, பின்பக்கம் ஒன்று... இப்படி நிறையக் குழந்தைகள். என் ஓய்வு நேரங்கள் எல்லாம் என் ஸ்வீட் ஹார்ட்டுக்கும் ஜூனியர் அஜீத், ஷாலினிகளுக்கும்தான். நல்ல தகப்பனாக... நல்ல ஆசிரியனாக... உண்மையான சேவகனாக, நிறைவான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன். அவர்களுக்கு என்று வாழ்க்கையின் எல்லாக் கதவுகளையும் திறந்துவைக்கப் போகிறேன்!'' - நெகிழ்ச்சி ததும்புகிறது அஜீத் குரலில்.

    ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை முடிக்கும் வேகத்தில் இருக்கிறார் ஷாலினி. எல்லாம் முடிந்து இரண்டு குடும்பங் களும் கலந்து பேசி திருமணத்துக்காக ஒரு நல்ல நாளை முடிவு செய்யப்போகிறார்கள். அதுவரையில் இருவர் கை களிலும் இருக்கும் செல்போன்கள் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருக்கும்... அவர்களின் சந்தோஷ எதிரொலியாக!



    Posted by விழியே பேசு... at 5:52 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    1 comment:

    1. saranMay 2, 2012 at 4:14 PM

      hi viziyepesu i am thala fan plz ad my thala bio data

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ▼  May (561)
      • ஜெகன்மோகன் ரெட்டி கைது! ஆந்திராவில் பலத்த போலீஸ் ...
      • கருணாநிதியை சந்திக்க கோர்ட்டில் அனுமதி கேட்க்கும் ...
      • இன்னொரு ஸ்ரீதேவியாக உருவாவாரா தமன்னா?
      • ஐபிஎல் 5 தொடரில் ஜொலித்த இளம்வீரர்கள்
      • டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகா...
      • காம்பீர் என்னை விட ஆக்ரோஷமான கேப்டன்: டோனி சொல்கிறார்
      • மீண்டும் அசத்த வருகிறார் 'ஆச்சி' மனோரமா!
      • ஆட்டோ கட்டணம் உயர்வால் சைக்கிள் ரிக்ஷாவுக்கு மாறிய...
      • முல்லைப் பெரியாறு அணையில் தமிழக போலீஸை நிறுத்துவோம...
      • பெரம்பூரில் மங்காத்தா நடிகர் குத்திக் கொலை: 3 ஆட்...
      • பாஜகவுக்கு உடம்பு சரியில்லை... ராம் ஜேத்மலானி நக்கல்
      • வெப்சைட்டில் விபசார அழகியாக கோ பட நடிகை காஜல் !
      • நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு இந்திய மாண...
      • இலங்கையில் தமிழர் பகுதியில் ராணுவம் குவிப்பு: இங்க...
      • இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பா...
      • பிறந்த நாள் ஸ்பெஷல் : மனோரமா
      • எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை...
      • திருமணம் லேட்டாகுதா? பரிகார பூஜைக்கு அழைத்து செல்க...
      • உல்பா தீவிரவாதிகள் விடுத்த 'பந்த்' அழைப்பை புறக்கண...
      • பாரதீய ஜனதாவில் எடியூரப்பா ஒரு 'மனித வெடிகுண்டு': ...
      • ஐ.பி.எல்.5: ஹாட்ரிக் சாதனை படைக்குமா சென்னை சூப்பர...
      • நக்சல் தலைவர் கைது
      • 15 ஊழல் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டது ஹசாரே குழு!
      • எண்ணெய் நிறுவனங்கள் சேவை நிறுத்தம்: டீசல் இல்லாமல்...
      • பிரபு யார்..? கார்த்திக் யார்..?
      • அமெரிக்காவின் முடிவுக்கு சீனா கண்டனம்
      • பிரஸ்சல்ஸ் ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையரில் சானிய...
      • முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்...தூக்கில் தொங்கிய...
      • சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!
      • பில்லா 2 இடைவேளையில் வாலை விடும் சிம்பு
      • ராமேசுவரத்தில் பரபரப்பு 500 மீட்டர் தூரத்திற்கு உள...
      • பெட்ரோல் 'குண்டைத்' தொடர்ந்து மக்களை தாக்க ஜூன் ம...
      • புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, ...
      • தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுங்கள்: மமதா...
      • தண்டவாளத்தில் ஏறும் தமிழக ஐ.டி. அமைச்சரின் வண்டவாளம்
      • மக்கள் எங்களிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நாங்கள் உண...
      • பாலியல் புகாரில் சிக்கினால் ஆசிரியர்கள் இனி டிஸ்மி...
      • காதலன் ராஜேஷ் உடன் ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்
      • புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது! பார்த்திபன் ...
      • அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும்! ஸ்ரு...
      • 'பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்...
      • ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர...
      • காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: விரைவில் மின்வெ...
      • சென்னை சூப்பர் கிங்ஸ் பைனலில் நுழைந்தது... விசில் ...
      • நரேந்திர மோடிக்கும் சஞ்சய் ஜோஷிக்கும் என்னதான் பிர...
      • பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா விரைவில் ம...
      • புதுக்கோட்டை: அதிமுக வேட்பாளரை எதிர்க்கும் அதிமுக ...
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: எஸ்ஸார் மற்றும் லூப் நிறுவ...
      • ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் ஜெ: அன்புமணி
      • பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: மாநிலங்களில் பந்த் அ...
      • அடுத்த சாவித்ரி.. எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த 'கீரோயி...
      • மதுரை ஆட்சியர், எஸ்.பி. மாற்றத்தின் பின்னணி என்ன?
      • விஜய்க்கு என்ன 17 வயசா? பிரபுதேவாவை கேட்ட அக்ஷய் க...
      • உதயகுமார் கேள்விகளுக்கு இந்திய அணுமின்கழகம் பதில்
      • நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்
      • தாண்டவம் எனக்கு இன்னொரு மங்காத்தா: லக்ஷ்மி ராய்
      • ஆப்கானிஸ்தானில் பள்ளி மாணவிகள் மீது தீவிரவாதிகள் வ...
      • கார்த்திக்கு வயசு 35: தலைவர்கள் ரேஞ்சில் பிறந்தநாள...
      • மானபங்க விவகாரம்: கிரிக்கெட் வீரருக்கு எதிரான வழக்...
      • தன்னைத் தானே எதிர்த்து 30-ம் தேதி திமுக போராட்டம்!
      • முதுநிலை ஆசிரியர்களுக்கான 2800 காலி இடங்களுக்கு நா...
      • பெட்ரோல் விலை உயர்வில் தி.மு.க.வுக்கு பங்கு உண்டு:...
      • ஆருஷியை கொன்றது பெற்றோரே: நீதிமன்றத்தில் சி.பி.ஐ வ...
      • மும்பைத் தாக்குதலில் உண்மை குற்றவாளிகள் விசாரிக்கப...
      • ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் 3 ஆயிரம் பேருக்...
      • பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடி தகுதியானவர்: எடியூரப்பா
      • குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலின் மாளிகையில் திர...
      • அடங்கொப்புரானே... கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு...
      • விவேகானந்தரும், நித்தியானந்தாவும் ஒன்று :டிராபிக் ...
      • பெட்ரோல் விலை குறைக்கப்படமாட்டாது: இந்தியன் ஆயில் ...
      • ஷங்கரின் நாயகியான அசின்!
      • ஜூனியர் ஆட்டிஸ்டுகளை விபச்சாரத்தி்ல் தள்ளிய 'கோலங்...
      • பிளஸ் டூ தேர்வு எழுதிய மகள் பாஸ், தந்தை ஃபெயில்
      • பெட்ரோல் விலை ரூ. 7.50 உயர்வு: மக்கள் ஏமாந்தவர்களா...
      • புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடக் கூடாது...ரஜினி ...
      • பெட்ரோலைத் தொடர்ந்து டீசல்- சமையல் கேஸ் விலையும் உ...
      • மும்பையில் நடைபெற்ற ஜனாதிபதியின் கப்பல்படை ஆய்வுக்...
      • பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் ...
      • என்னைக் கொல்ல மாவோயிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், 6 நா...
      • என் தந்தையால் என் உயிருக்கு ஆபத்து: பிசிசிஐ தலைவர்...
      • ராமஜெயம் ஸ்டைலில் இன்னொரு கொலை
      • புதுமணத்தம்பதியர் தூக்குப்போட்டு தற்கொலை: திருமணமா...
      • வெளிநாட்டுப் பெண் என்று கூறியதற்காக சோனியா என்னை ம...
      • பீகாரில் முதல்-மந்திரி யாத்திரையில் சென்ற வாகனங்கள...
      • ஏழைகள் விடும் கண்ணீர் மத்திய அரசை அழித்து விடும்-ஜ...
      • ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று போட்டி: சென்னை சூப்பர் க...
      • பின்லேடனை காட்டிக் கொடுத்த பாக். டாக்டருக்கு 33 ஆண...
      • இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே ...
      • மத்தியில் அரசு செயல்படுதா? என்று மக்கள் கேட்கின்றன...
      • ஜனாதிபதி தேர்தல்: காங்கிரசுக்கு முலாயம்சிங் ஆதரவு
      • இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவது ம...
      • ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டம்: புனே அணியின் அலுவல...
      • ஐ.பிஎல்.5: பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் : ஐ.பி.எ...
      • முன்னாள் வீரர்களுக்கு ஊக்கத்தொகை: கபில்தேவ், அசார...
      • கேரளாவில் வசிப்பதற்கே பயமாக உள்ளது: மோகன்லால் அச்சம்
      • ஹஜ் பயண மானியம் ரத்தா? அமைச்சர் கிருஷ்ணா பதில்
      • பிரதமர் அளித்த விருந்தில் முதல் வரிசையில் இடம் பிட...
      • அமெரிக்க பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோருவதற்கு தைரியம...
      • ஜேம்ஸ்பாண்டின் புதியபடமான 'ஸ்கை பால்' டிரெய்லர் வெ...
      • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார பந்துவீச்சு-டெல்லி டேர...
      • ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தொடங்கி மூன்று வரு...
      • கார்த்தியின் 'சகுனி' அரசியல்வாதிகளுக்கு எதிரான படம...
      • இன்றைய செய்திகள் (22-05-2012)(செய்தி,சினிமா, விளைய...
      • நடிகர் சங்கத் தேர்தல்... ராதாரவிக்கு எதிராக குமரிம...
      • கடும் 'பசியில்' மத்திய அரசு.. 'டயட்டில்' திமுக! வி...
      • பிளஸ்டூவில் தேர்வில் கலக்கிய பேரறிவாளன் 1096, முரு...
      • ஆந்திராவில் இரு ரயில்கள் மோதி, தீப் பிடித்து 25 பே...
      • வயிறு வலின்னு வந்த மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது
      • +2 தேர்வில் நாமக்கல் சுஷ்மிதா முதலிடம்-3 இடங்களும்...
      • ஃபேஸ்புக்கில் ஆசிரியைகளை விலைமாதுகளாக சித்தரித்த ம...
      • நியூயார்க் சர்வதேச பட விழாவுக்கு ‘3’ படம் தேர்வானது
      • ப்ளஸ் டூ தேர்வில் 86.7% பேர் தேர்ச்சி - மாணவியரே வ...
      • தென் மாநிலங்களில் மின்வெட்டு அபாயம்
      • அரவான் நஷ்டத்தை ராட்டினம் சரிகட்டிய கதை!!
      • முல்லைப்பெரியாறை தொடர்ந்து கேரளாவின் அடுத்த வம்பு
      • நடிகையின் இடுப்பில் டான்ஸ் மாஸ்டர்
      • ராஜா வரவேற்பு - தி.மு.க., வருத்தம்
      • பகலவன் படத்தில் விஜய் இல்லை சீமான் அறிவிப்பு
      • அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவ...
      • நேட்டோ மாநாட்டில் ஒபாமாவின் உரையில் பாகிஸ்தான் அதி...
      • இன்றைய செய்திகள் (21-05-2012)
      • ஜெயலலிதாவின் ஜனாதிபதி வேட்பாளரை சொந்த கட்சியே ஆதரி...
      • ராட்டினம் திரைப்பட வீடியோ பாடல்கள்
      • பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்திக்க பராக் ஒபாமா ம...
      • ஜூன் மாத இறுதியில் கோச்சடையான் இசை!
      • ஊட்டி, கொடைக்கானலுக்கு மின்வெட்டில் இருந்து விலக்க...
      • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம்
      • விஜயகாந்த் ஆதரவு கேட்டால் மேலிடம் முடிவு செய்யும்-...
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.