Friday, May 25, 2012

மானபங்க விவகாரம்: கிரிக்கெட் வீரருக்கு எதிரான வழக்கு கோர்ட்டில் ரத்து

ஐ.பி.எல். பெங்களூர் அணி வீரர் லூக் மீது அமெரிக்காவைச் சேர்ந்த ஜோஹல் என்ற பெண் பாலியல் புகார் கூறினார். அவரது வருங்கால கணவரை லூக் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்தது. இதனிடையே நீதிமன்றத்துக்கு வெளியே இருவரும் சமரசம் செய்து கொண்டனர். எனவே லூக் மீதான புகாரை ஜோஹல் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். 

இதன்படி டெல்லி ஐகோர்ட்டில் ஜோஹல் தரப்பில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. இறுதியில் லூக் மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.




No comments:

Post a Comment