Thursday, June 7, 2012

கடற்படை ரகசியம் கசிந்த வழக்கு: தொழில் அதிபருக்கு சொந்தமான 10 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

கடற்படை தொடர்பான பல முக்கிய தகவல்கள் கடந்த 2006-ம் ஆண்டு கடத்தப்பட்டன. கடற்படையின் முக்கிய நடவடிக்ககைள் இதனால் வெளியில் கசிந்தன. இது ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. 

கடற்படை ரகசியங்களை வெளியிட்டதாக அமெரிக்க வாழ் தொழில் அதிபரும், ஆயுத ஏஜெண்டுமான அபிஷேக் வர்மா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. அதன் பேரில் விசாரணை நடந்து வந்தது. 

இந்த நிலையில் தொழில் அதிபர் அசோக் வர்மாவின் டெல்லி குர்கானில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ. திடீர் சோதனை நடத்தியது. மொத்தம் 10 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 

நூற்றுக்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் இன்றைய சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. சுவிஸ் வங்கிகளில் பணம் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன. 

இந்த ஆவணங்களின் அடிப்படையில் அபிஷேக் வர்மா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment