Monday, July 30, 2012

அடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2-வது பவுர்ணமி நீல நிறத்தில் தெரியும்

ஆகஸ்ட் மாதத்தில் பல புனித நாட்கள் வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 1-ந்தேதியும், 31-ந்தேதியும் 2 பவுர்ணமி நாட்கள் வருகிறது. 1-ந்தேதி தோன்றும் பவுர்ணமி வழக்கம்போல் இருக்கும். 31-ந்தேதி தோன்றும் பவுர்ணமி நீல கலரில் தெரியும். இது அபூர்வமான நிகழ்வு ஆகும்.

2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்று நீலநிற பவுர்ணமி காணப்படும். பவுர்ணமி நாட்களில் ஏற்படும் புவிஈர்ப்பு விசையால் பூமியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்போது ஆடி மாதம் நடைபெற்று வருகிறது. ஆடி வெள்ளி கிழமைகளுக்கு தனி சிறப்பு உண்டு. அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் அம்மன் கோவில்களில் ஆடிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஆகஸ்ட் மாதத்தில் 2 ஆடி வெள்ளிக்கிழமைகள் வருகிறது. அத்துடன் பவுர்ணமியும் சேர்ந்து வருவதால் ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். 

மேலும் ஆகஸ்ட் 9-ந்தேதி கிருஷ்ண ஜெயந்தியும் 20-ந்தேதி ரம்ஜான் பண்டிகையும் வருவதால் ஆகஸ்ட் மாதம் புனித மாதமாக கருதப்படுகிறது.




No comments:

Post a Comment