Monday, July 30, 2012

அரக்கோணம் அருகே கர்ப்பிணி பெண்ணை கடத்தி 2-வது திருமணம்

அரக்கோணம் அடுத்த மேல்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவர் அரக்கோணம் தாலுகா போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- 

எனக்கும் எனது அக்காள் மகள் தேன்மொழிக்கும் கடந்த 23.08.2009-ல் திருமணம் நடந்தது. கர்ப்பிணியான எனது மனைவி மருத்துவ பரிசோதனைக்காக கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி திருத்தணி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அதன் பிறகு அவள் வீடு திரும்பவில்லை. 

அக்கம் பக்கத்தில் உறவினர் வீடுகளில் அவரை தேடினேன். இந்நிலையில் மெத்தவாடி கிராமத்தை சேர்ந்த நேசன் என்பவர் எனது மனைவியை கடத்தி 2-வது திருமணம் செய்தது தெரியவந்தது. அவளை 2-வது திருமணம் செய்து கொண்டது சட்டபடி குற்றம்.

இதுபற்றி வெளியில் சொன்னாலோ போலீசில் புகார் செய்தாலோ உன்னை ஒழித்து விடுவேன் என்று நேசன் மிரட்டுகிறார். தொடர்ந்து அவர் மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது மனைவியை மீட்டு தரவேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்




No comments:

Post a Comment