Monday, July 30, 2012

ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் போட்டி


தமிழில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நான்கு படங்கள் தயாராகின்றன. இவற்றில் எந்த படத்தை முதலில் ரிலீஸ் செய்வது என்பதில் போட்டா போட்டி நிலவுகிறது.

சூர்யா மாற்றான்படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கிறார். நாயகி காஜல் அகர்வால். கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை வருகிற 9-ந்தேதி சிங்கப்பூரில் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார். இவ்விழாவில் பங்கேற்க சூர்யா, காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சிங்கப்பூர் செல்ல உள்ளனர்.

சாருலதாஎன்ற படத்தில் பிரியாமணி ஒட்டிப்பிறந்த இரட்டையராக வருகிறார். பொன்.குமரன் இயக்குகிறார். அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

இருவன்என்ற பெயரில் இன்னொரு ஒட்டிப்பிறந்த இரட்டையர் படம் தயாராகி உள்ளது. முருகானந்தம் இயக்கி உள்ளார். உடல் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் உண்மை கதை என்று விளம்பரப்படுத்தி உள்ளனர்.

மலையாளத்தில் 1997-ல் இரட்டதலஎன்ற பெயரில் ரிலீசான ஒட்டிப்பிறந்த இரட்டையர் படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடவும் ஏற்பாடு நடக்கிறது.


No comments:

Post a Comment