Tuesday, July 24, 2012

நெல்லை அருகே போலீஸ் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால் குறிச்சியில் இன்று மாலை திடீரென்று இரு தரப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர்.  

அங்கு மோதல் வலுத்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஒரு கட்டத்தில் அந்த கும்பல் போலீசாரை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. 

இந்த துப்பாக்கி சூட்டில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சுட்டதில் வாணுமாமலை என்பவர் இறந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார். 

மோதலை தடுக்க சென்றபோது சிலர் தம்மை தாக்க முயன்றதால் பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதாக இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு மேலும் போலீசார் விரைந்துள்ளனர்.




No comments:

Post a Comment