Tuesday, July 31, 2012

அசாமில் ராணுவ வாகனம் குண்டு வைத்து தகர்ப்பு: ராணுவ வீரர் ஒருவர் பலி


அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் இன்று இராணுவ வாகனம் ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதுடன் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இன்று காலை 10.25 மணிக்கு கோக்ராஜர் பகுதியிலிருந்து கொல்பார்வில் உள்ள அஜியா என்னுமிடத்திற்கு இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற அந்த வாகனத்தின் அடியில் இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் இராணுவ வாகனத்துடன் வந்த மற்றொரு டாடா சுமோ காரும் பாதிப்படைந்துள்ளது. இந்த தாக்குதல், அசாமில் இயங்கி வரும் உல்பா தீவிரவாதிகளின் சதிச்செயலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.



No comments:

Post a Comment