Thursday, July 26, 2012

'தில்லு முல்லு' படத்தை ரீமேக் செய்ய எதிர்ப்பு


ரஜினி, மாதவி ஜோடியாக நடித்து 1981-ல் ரிலீசான படம் தில்லு முல்லு’. பாலசந்தர் இயக்கினார். இப்படத்தை ரீமேக் செய்யப்போவதாக பாலசந்தரின் கவிதாலயா பட நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலாகேந்திரா மூவிஸ் உரிமையாளர் விஜயலட்சுமி கவிதாலயாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தில்லு முல்லுபடத்தின் உரிமை எங்களிடம் உள்ளது. எங்கள் அனுமதியின்றி படத்தை ரீமேக் செய்யக்கூடாது என்று நோட்டீசில் குறிப்பிட்டு உள்ளார்.

வக்கீல் ஆனந்தன் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment