Tuesday, July 24, 2012

ஆசிரியர் தகுதி தேர்வு விடைகள் வெளியீடு


ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடந்தது. இத்தேர்வை தமிழகம் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். ஆசிரியர் தகுதி தேர்வின் கீ ஆன்சர்எனப்படும் விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பட்டதாரி ஆசிரியர்கள் எழுதிய இரண்டாம் தாளுக்கான கீ ஆன்சர்வெளியிடப்பட்டுள்ளது. முதல் தாளுக்கான் கீ ஆன்சர்அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள விடைகளில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வரும் 30 ஆம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


No comments:

Post a Comment