Tuesday, July 24, 2012

குளிப்பதை வீடியோ எடுத்து மாணவர்கள் மிரட்டல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை


கல்லூரி மாணவி வீட்டில் குளித்ததை மாணவர்கள் செல்போனில் படம் எடுத்துவைத்து மிரட்டியுள்ளனர். இதனால் வேதனை அடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதமும் சிக்கியது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா(22). இவர் செங்கம் அருகே உள்ள ஒரு பாலிடெக் னிக் கல்லூரியில் டிப்ளமோ 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் வீட்டில் குளித்தபோது சில மாணவர்கள் மறைந்திருந்து ரகசியமாக செல்போனில் படம் எடுத்ததாக தெரிகிறது. பின்னர் இந்த படத்தை மாணவியிடம் அந்த மாணவர்கள் காண்பித்துள்ளனர். Ôநாங்கள் சொல்கிற படி கேட்கவேண்டும். இல்லையென்றால் இன்டர்நெட்டில் படத்தை வெளியிட்டு விடுவோம்Õ என்று அடிக்கடி
மிரட்டியுள்ளனர். அவமானத் துக்கு பயந்த அகிலாவும் அவர்கள் சொல்கிறபடியெல்லாம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது, அகிலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அகிலா எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில் என்னுடைய சாவுக்கு காரணம் வினோத், ஜெகன், எழில். இவர்கள் நான் குளிக்கும்போது வீடியோ கேமராவில் எடுத்துவிட்டனர். அதை வைத்து என்னை மிரட்டினார்கள். அவர்கள் சொல்வதை செய்தால் ஒன்றும் செய்யமாட்டோம். இல்லாவிட்டால் இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டினர். நானும் வேறுவழி யின்றி அவர்கள் சொன்னதையெல்லாம் நான் செய்தேன். அவமானத்துக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டேன்என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


1 comment:

  1. உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் இப்படிக்கு
    Azhahi.Com

    இப்படிக்கு
    Azhahi.Com

    ReplyDelete