Friday, July 27, 2012

ஸ்ரீகாந்த் படத்துக்காக சிம்பு பாடும் குத்துப்பாட்டு


தான் நடிக்கும் படங்கள் மட்டுமில்லாமல், மற்ற கதாநாயகர்களின் படங்களுக்கும் பின்னணி பாடல்கள் பாடுவதில் ஆர்வம் கொண்டவர் சிம்பு.  இவர், ஏற்கெனவே பிரசாந்த் நடித்த மம்பட்டியான்படத்திற்காக தீம் பாடலை பாடிக் கொடுத்தார். அப்பாடல் மெகா ஹிட்டானது.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் நடிக்கும் எதிர் எண் -3’ என்ற படத்தில் நச்சுக்கு நச்சுக்குன்னுஎன துவங்கும் ஒரு குத்து பாடலை பாடியுள்ளார். இப்பாடலுக்கு தரண் இசையமைத்துள்ளார்.

இப்பாடலுக்காக நாற்பது லட்சம் ரூபாய் செலவில் எட்டுவிதமான செட் போடப்பட்டு, ஸ்ரீகாந்தும், பூனம் பாஜ்வாவும் குத்தாட்டம் போட்டுள்ளனர். இளவட்ட ரசிகர்களை கவரும் வகையில் இப்பாடல் இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இப்படத்தின் இயக்குனர் ராம்குமார்.


No comments:

Post a Comment