Friday, August 24, 2012

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு


அடுத்த மாதம் இலங்கையில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி கொழும்பில் இன்று அறிவிக்கப்பட்டது. ஜெயவர்த்தனே தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணியில் புதுமுக வீரர்களான அகிலா தனஞ்சயா, தில்ஷான் முனாவீரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 19 வயது சுழற்பந்து வீச்சாளரான தனஞ்சயா இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால், அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
மேலும், முதுகுவலி காரணமாக கடந்த 7 மாதகாலமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிசும் 20 ஓவர் உலககோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
இந்தியாவுடனான ஒருநாள் தொடரின்போது காயமடைந்த முன்னணி வீரர்களான சங்ககாரா, குலசேகரா ஆகியோர் உடல்தகுதி பெற்றுள்ளதால், மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர். அடுத்த மாதம் 18-ம் தேதி துவங்கும் உலககோப்பை தொடரில் இலங்கை அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடன் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. 18-ம் தேதி நடக்க இருக்கும் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது.
 
15 வீரர்கள் கொண்ட இலங்கை அணி விவரம் பின்வருமாறு:
 
மகேலா ஜெயவர்த்தனே (கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், குமார் சங்ககாரா, திலகரத்னே தில்ஷான், லகிரு திரிமன்னே, ஜீவன் மெண்டிஸ், அகிலா தனஞ்சயா, தில்ஷான் முனாவீரா, திசாரா பெரேரா, லசித் மலிங்கா, நுவான் குலசேகரா, ரெங்கனா ஹெராத், அஜந்தா மெண்டிஸ், தினேஷ் சண்டிமால் மற்றும் ஷமிண்டா எரங்கா


No comments:

Post a Comment