இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்த வீரர் சுசில்குமார் புதிய வரலாறு படைத்தார். 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சுசில்குமார் வெண்கல பதக்கம் வென்றார். லண்டன் ஒலிம்பிக்கில் நேற்று அவர் வெள்ளிப் பதக்கம் பெற்று முத்திரை பதித்தார்.
66 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் அவர் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரரிடம் தோற்றதால் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் 2 பதக்கம் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை சுசில்குமார் படைத்தார்.
எந்த ஒரு இந்திய வீரரும் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கம் வென்றது இல்லை. 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் நார்மன் ரிச்சர்டு 2 வெள்ளிப்பதக்கம் பெற்றார். அது இந்தியாவுக்கு கிடைத்த பதக்கமாக கருதப்பட்டாலும் அவர் இங்கிலாந்தை சேர்ந்தவர் ஆவார்.
அணிகள் பிரிவில் ஆக்கியில்தான் அதிகபட்சமாக 11 பதக்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் 2 பதக்கம் பெற்று புதிய வரலாறு படைத்த சுசில்குமாருக்கு பாராட்டும், பரிசுகளும் குவிகின்றன. அவருக்கு இதுவரை ரூ.4.10 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியானாவை சேர்ந்த சுசில்குமாருக்கு அம்மாநில அரசு ரூ.1.5 கோடி அறிவித்து உள்ளது. டெல்லி முதல்- மந்திரி ஷீலாதீட்சித் ரூ.1 கோடியும், ரெயில்வேயில் பணிபுரிவதால் இந்தியன் ரெயில்வே ரூ.75 லட்சமும் அறிவித்துள்ளது.
வெள்ளிப்பதக்கம் பெறுபவருக்கு மத்திய அரசு சார்பில் ரூ.30 லட்சம் வழங்கப்படும். அதன்படி அவருக்கு அந்த தொகை கிடைக்கும். மேலும் உருக்காலை நிறுவனம் சார்பில் ரூ.25 லட்சமும், எலெக்ட்ரானிக் நிறுவனம் சார்பில் ரூ.15 லட்சமும், ஒ.என்.ஜி.சி. சார்பில் ரூ.15 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய சாதனை படைத்த சுசில்குமாருக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார். கிரிக்கெட் வீரர்கள் தெண்டுல்கர், ஜாகீர்கான் மற்றம் மேரிகோம், வீரேந்தர்சிங், அபினவ்பிந்த்ரா ஆகியோரும் சுசில்குமாரை பாராட்டியுள்ளனர்.

இது எல்லாம் சரி , சகாரா நிறுவனம் தனிபிரிவில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறும் வீரருக்கு நான்கு கிலோ தங்கமும், வெள்ளி பதக்கம் பெறும் வீரர்களுக்கு மூன்று கிலோ தங்கமும் வெண்கலப் பதக்கம் பெரும் வீரருக்கு இரண்டு கிலோ தங்கமும் கொடுபதாக அறிவிச்சாங்களே அது என்னாச்சு ....! இந்திய வீரர்களுக்கு ஒரு பதக்கம் கூட தேறாதுன்னு வாயை கொடுத்திட்டாங்களோ....

No comments:
Post a Comment