Thursday, August 2, 2012

அமைச்சர் சிவபதி, போய் ஒரு வாரம் ஒலிம்பிக் பார்த்துட்டு வாங்க... ஜெ. உத்தரவு!


தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி ஒரு வாரம் லண்டனில் தங்கி ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கப் போகிறார்.

முதல்வர் ஜெயலலிதாதான் லண்டனுக்குப் போய் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்து விட்டு வருமாறு சிவபதிக்கு உத்தரவிட்டுள்ளாராம். அதன் பேரில் லண்டன் செல்கிறார் சிவபதி என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

சிவபதி எப்போது லண்டன் செல்வார் என்று தெரியவில்லை. தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனேகமாக அடுத்த வாரத்தில் சிவபதி லண்டன் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:

Post a Comment