ஒலிம்பிக் விளையாட்டில் 60 கிலோ எடைப் பிரிவிற்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவின் யோகேஸ்வர் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் ரெபசேஜ் முறையில் தொடர்ந்து 3 சுற்றுக்களிலும் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார்.
கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய வீரர் குதுக்கோவுடன் போட்டியிட்ட யோகேஸ்வர் தோல்வியடைந்தார். இறுதிப் போட்டிக்கு குதுக்கோ தகுதி பெற்றதால் அவரிடம் தோற்ற யோகஸ்வருக்கு ரெபசேஜ் முறையில் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்றால் வெண்கல பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட யோகேஸ்வர் முதல் சுற்றில் பியூர்டோ ரிகா வீரரையும், 2-வது சுற்றில் ஈரான் வீரரையும், 3-வது சுற்றில் வடகொரியா வீரரையும் வென்று வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார். இதையடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை பெற்றுத் தந்தை பெருமை இவரைச் சேர்ந்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 4 வெண்கல பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம் உள்பட மொத்தம் 5 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 52-வது இடத்தில் உள்ளது.
இதேபோல், இதே பிரிவில் தங்க பதக்கத்துக்கான போட்டியில் அஜெர்பைஸன் நாட்டைச் சேர்ந்த அஸ்கரோவும், ரஷ்யாவின் குதுக்கோவும் போட்டியிட்டனர். இதில் அஸ்கரோ வென்று தங்க பதக்கத்தையும், அவரிடம் தோற்ற குதுக்கோ வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

No comments:
Post a Comment