Wednesday, August 1, 2012

நயன்தாராவுடன் பழகியதால் திரிஷா பிரபுதேவா படத்தில் வாய்ப்பை இழந்தார்


நயன்தாராவுடன் பழகியதால் திரிஷா, இந்தியில் பிரபுதேவா இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் திரிஷாவை நாயகியாக வைத்து பிரபுதேவா இயக்கிய நு ஒஸ்தனன்டே நேனொ ஒத்தன்டனாஎன்ற படம் 2005-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க உனக்கும் எனக்கும்என்ற பெயரில் தயாரானது. இதிலும் திரிஷாவே நாயகியாக நடித்தார்.

தற்போது இப்படத்தை இந்தியிலும், ரீமேக் செய்கிறார் பிரபுதேவா. அதிலும் திரிஷா நாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. கேரக்டரில் திரிஷா பொருத்தமாக இருந்ததால் அவரையே தேர்வு செய்ய பிரபுதேவா திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. திரிஷாவும் அதில் நடிக்க ஆர்வமாக இருந்தார்.

ஏற்கனவே அவர் இந்தியில் அறிமுகமான காட்டா மீட்டாபடம் படுதோல்வி அடைந்தது. எனவே பிரபுதேவா படம் மூலம் இந்தியில் மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் திடீரென திரிஷாவுக்கு பதில் ஸ்ருதிஹாசனை பிரபுதேவா நாயகியாக தேர்வு செய்து விட்டார். இதனால் திரிஷா அதிர்ச்சியாகியுள்ளார்.

சமீபத்தில் படவிழாவையொட்டி நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் நயன்தாராவும், திரிஷாவும் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டினர். அதன்பிறகு தொடர்ந்து இருவரும் டெலிபோனில் பேசியும் நேரில் சந்தித்தும் நெருக்கமான தோழிகளாக பழகினார்கள். இது பிரபுதேவாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும், அதனாலலேயே திரிஷாவை கழற்றி விட்டதாகவும் செய்தி பரவியுள்ளது.


No comments:

Post a Comment