Sunday, August 26, 2012

வருகிறது இன்னொரு மைனா


சென்னையில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் கன்னடத்தில் உருவாகி உள்ள படம், ‘மைனா'. சரத்குமார், சுகாசினி, மாளவிகா, நித்யா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். நாகசேகர் இயக்கி உள்ளார். இதை தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் டப் செய்து வெளியிட உள்ளனர். இதுபற்றி நாகசேகர் கூறும்போது, ‘இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட நினைத்தோம். இதில் நடித்துள்ளவர்கள் தென்னிந்திய மொழி அனைத்திலும் அறியப்படுகிறவர்கள் என்பதால் தெலுங்கு, மலையாளத்திலும் டப் செய்கிறோம். தமிழில் மைனாஎன்ற பெயரில் ஏற்கனவே படம் வந்துள்ளதால் இங்கு மட்டும் பூர்விஎன்ற பெயரில் வெளியிடுகிறோம்என்றார்.



No comments:

Post a Comment