Wednesday, August 1, 2012

அற்புதமான மனிதர்: நடிகர் தனுசுக்கு தமன்னா பாராட்டு


தமன்னாவும் தனுசும் வேங்கைபடத்தில் ஜோடியாக நடித்தனர். அதன்பிறகு தமன்னா தெலுங்கில் பிசியானார். தனுஷ் வேறு நாயகிகளுடன் இணைந்து நடித்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். தனுஷ் சில தினங்களுக்கு முன் சென்னையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி நடந்த விருந்து நிகழ்ச்சியில் தமன்னா பங்கேற்றார். இருவரும் தனியாக பேசிக்கொண்டு இருந்தனர்.

இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தனுஷ் பிறந்த நாள் கொண்டாடியபோது நான் சென்னையில் இருந்தேன். எனவே விருந்துக்கு போனேன். வேங்கைபடத்தில் இருந்து நானும் தனுசும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். தனுஷ் அற்புதமான சிறந்த மனிதர். அவர் பிறந்த நாளில் என்னால் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருவரும் நிறைய விஷயங்கள் பற்றி பேசினோம். விருந்தில் நடந்த விஷயங்கள் பற்றி சொல்ல முடியாது.

இவ்வாறு தமன்னா கூறினார்.


No comments:

Post a Comment