கேரளாவில் 1985-ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் பட்டம் பெற்றவர் ஸ்ரீலதா மேனன். இவர் மலையாள படவுலகில் நுழைந்தார். பெருந்தட்சன், கவுதுதா உள்பட 50-க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்தார். 200 டி.வி. தொடர்களில் நடித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீலதாமேனனின் கணவர் இறந்தார். இதனால் தனது 3 குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சில ஆண்டுகளாக எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடக்கும் நடிகை ஸ்ரீலதாமேனன் வறுமையின் காரணமாக போதிய மருத்துவ சிகிச்சைக்கு வழி இன்றி தவிக்கிறார்.
இதற்கிடையே ஸ்ரீலதா மேனன் வசிக்கும் வாடகை வீட்டையும் காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் வலியுறுத்தி வருகிறார். அவரது மூத்த மகன் வறுமையால் பிளஸ் 2-வுக்கு பின் படிப்பை நிறுத்தி விட்டார்.
வறுமை மற்றும் நோயின் பிடியில் தவிக்கும் நடிகை ஸ்ரீலதாமேனனுக்கு தற்போது கேரளா அரசு முதல்-மந்திரி நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கப் போவதாக மந்திரி கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment