
லண்டன் ஒலிம்பிக்கில் நேற்று தடகள போட்டியில் 5 தங்கப்பதக்கத்திற்கான போட்டிகள் நடைபெற்றது.
ஆண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீரர் டேவிட் லெக்யுதா ருதிஷா முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார். இரண்டாவதாக வந்த போட்ஸ்வானா வீரர் நிஷல் அமோஸ் வெள்ளி பதக்கத்தையும் மூன்றாவதாக வந்த கென்யா நாட்டு வீரரான டிமோதி கிட்டு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர்.
ஆண்கள் 200 மீட்டர் ஓட்டத்தின் அனைத்து பதக்கங்களையும் ஜமைக்கா நாட்டு வீரர்களே கைப்பற்றினர். முதலாவதாக வந்த உசைன் போல்ட் தங்கத்தையும், இரண்டாவதாக வந்த யோகள் பிளேக் வெள்ளி பதக்கத்தையும், மூன்றாவதாக வந்த வாரன் வெயிர் வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.
ஆண்கள் மும்முறை தாண்டும் போட்டியின் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை அமெரிக்க வீரர்கள் கைப்பற்றினர். அமெரிக்காவின் கிறிஸ்டியன் டெய்லர் தங்கப்பதக்கத்தையும், சக நாட்டு வீரரான வில் கிலே வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றினர். மூன்றாவதாக வந்த இத்தாலி நாட்டு வீரர் பேப்ரிஷியோ டோனேட்டோ வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.
பெண்களுக்காக நடைபெற்ற ஈட்டி எறிதல் போடியில் செக் ரிப்பப்ளிக் நாட்டு வீராங்கனையான பார்போரா ஸ்போட்டகோவா தங்கத்தையும், ஜெர்மனி நாட்டு வீராங்கனைகளான கிறிஸ்டினா ஒபர்க்போல், லிண்டா ஷா முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றினர்.
ஆண்களுக்கான டெக்காத்லான் போட்டியில் அமெரிக்க வீரர்களான ஆஷ்டன் ஈட்டன், டிரே ஹர்டே முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை கைப்பற்றினர். கியூபா நாட்டு வீரரான லியோனெல் சுராஸ் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
No comments:
Post a Comment