Saturday, August 25, 2012

சல்மான்கானுக்கு பேசப்பட்ட சம்பளத்தால் பரப்பரப்பு


இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான்கான். இவர் கடைசியாக நடித்த தபங், ரெடி, பாடி கார்டு ஆகிய 3 படங்களும் வசூலை அள்ளி குவித்துள்ளன. அவர் நடித்த ஏக் தா டைகர்படமும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதை தொடர்ந்து, சல்மான்கானை தங்களின் படத்தில் நடிக்க வைப்பதற்காக சுபாஷ் கய், யாஷ் சோப்ரா, விஜய் கலானி, ரமேஷ் தவுரானி, யு.டி.வி டிஸ்னி, ஸ்டூடியோ,8, சாஜித் நாடியாட்வாலா, சூரஜ் பார்ஜாத்யா, ராஜ்குமார் சந்தோஷி, பர்ஹான் கான், ஃபரா கான் மற்றும் கரண் ஜோகர் போன்ற பிரபல தயாரிப்பாளர்கள் அவருடைய வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர்.   இதில், சல்மான்கானுக்கு  ரமேஷ் தவுரானி ரூ.100 கோடி சம்பளம் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்தி திரையுலகமே பரபரப்பு அடைந்துள்ளது. தவுரானி ஏற்கனவே சல்மான்கானை வைத்து படம் எடுத்துள்ளார். ‘‘சல்மான் எனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்க ரூ.100 கோடி சம்பளம் கொடுப்பது பற்றி வெளியான தகவல் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை’’ என்றார்.


No comments:

Post a Comment