Friday, September 14, 2012

மனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்


ஆங்கில சினிமா படங்களில் 'ஜேம்ஸ் பாண்ட்' வரிசையில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றவையாகும். இந்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர்களில் ஒருவர் ரோஜர் மூர். சினிமா படத்தில் தான் அவர் துப்பறியும் வீரதீரர் வேடம் ஏற்றார். உண்மையான வாழ்க்கையில் அவர் தனது மனைவிகளிடம் அடி-உதை வாங்கி இருக்கிறார்.
தற்போது 84 வயதாகும் அவர் இந்த ருசிகர தகவலை ஒரு பேட்டியில் விளக்கி இருக்கிறார். அவருடைய முன்னாள் முதல் மனைவி டூர்ன்வான் என்பவர் ரோஜர் மூரை கையால் குத்து விடுவதுடன் நகத்தால் கீறி விடுவாராம். ஒரு முறை டீ கோப்பையாலும் தாக்கி இருக்கிறார். அடுத்து 2-வது மனைவியான டாரோதி ஸ்குரீஸ் எம்பவரும் ரோஜர் மூர் தன்னிடம் நம்பிக்கைக்குரியவராக இல்லை என கருதி வன்முறையில் ஈடுபட்டு இருக்கிறார். கணவரின் தலையில் கித்தார் இசைக்கருவியை கொண்டு தாக்கியுள்ளார். 


No comments:

Post a Comment