Monday, September 17, 2012

திருநெல்வேலி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்


திருநெல்வேலி மாவட்டம்  தென்காசி அருகே உள்ள வடகரை அச்சன் புதூரிலிருந்து களக்காடு வரை நேற்று லேசான நிலநடுக்கம் உணரபட்டது. அப்போது வீடுகளில் வைத்திருந்த பொருட்கள் கீழே விழுந்ததை பார்த்த பொதுமக்கள் அச்சத்துடன் வெளியே ஓடிவந்தனர்.
 
நேற்று மாலை 5.30 மணியளவில் சிலநிமிடங்கள் வரை லேசான நிலநடுக்கம் இந்தப்பகுதிகளில் ஏற்பட்டதாக மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். இதில் யாருக்கும் பாதிப்போ மற்றும் வீடுகளுக்கு சேதாரமோ இல்லை என அப்பகுதி காவல் துறையினர் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment