Tuesday, September 11, 2012

இரவு நேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்வாரியத்திற்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு


கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மின்வெட்டு கூடாது என்று மின்சார வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரவில் மின்வெட்டு கூடாது என்ற மனுதாரரின் கோரிக்கையை மின்சார வாரியம் பரிசீலனை செய்யலாம். ஆனால் இரவுநேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்சார வாரியத்திற்கு உத்தரவிட முடியாது.போதிய அளவில் மின்சாரம் இருப்பதை உறுதி செய்த பின்னரே மின்வெட்டை ரத்து செய்ய முடியும் என்றும் நீதிபதி கூறினார்.




No comments:

Post a Comment