Wednesday, October 3, 2012

அஜீத், சிம்பு இணைந்து நடிக்க முடிவு?


அஜீத்தின் தீவிர ரசிகர் சிம்பு. தியேட்டர்களில் அஜீத் படங்கள் ரிலீசாகும்போது முதல் ஆளாக ஆஜராகி விடுவார். மங்காத்தா படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்தார்.

அஜீத்துடன் புதுப்படமொன்றில் இணைந்து நடிக்க வேண்டும் என்பது சிம்புவின் நீண்டநாள் ஆசையாக உள்ளது. இதனை அஜீத்திடமே சொல்லி விட்டார். இதையடுத்து சிம்பு தனது படத்தில் நடிக்க அஜீத் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

அஜீத் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது முடிந்ததும் சிவா இயக்கும் படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சிவா ஏற்கனவே கார்த்தி நடித்த 'சிறுத்தை' படத்தை டைரக்டு செய்தவர். அஜீத், சிம்புவுக்கான கதையை அவர் தயார் செய்து வருகிறார்.



No comments:

Post a Comment