விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, December 24, 2014

    எம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை

    வரலாற்றிலும் புனைவுகளிலும் இடம்பெற்றுள்ள விக்கிரமாதித்யன் ஒரு விதத்தில் குறியீட்டுத் தன்மை கொண்டவன். இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததாகக் கதைகளில் இடம்பெற்றுள்ள காவிய நாயகன் இவன். குப்த வம்சத்தில் வந்த விக்ரமாதித்தன் என்னும் புகழ்பெற்ற மன்னனைப் பற்றி வரலாற்றில் படிக்கிறோம். அந்த மன்னனின் வாழ்வும் அவனது புகழின் கதிர்களும் சேர்ந்து எழுதிய கதையாகத்தான் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளின் கதையை நாம் நவீனத்துவப் பொருளில் புரிந்துகொள்ள முடியும்.

    இந்த மன்னன் எப்படி இத்தகைய காவியத் தன்மையைப் பெற்றான் என்ற வியப்பு ஏற்படலாம். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனைச் சுற்றியும் இதுபோன்ற கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது விக்கிரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது. அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்.

    எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர் எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள். கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது “இந்த கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள். “ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்.

    எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை. எம்.ஜி.ஆர். தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி ‘எக்ஸ் ரே’ தன்மை கொண்டது. எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. எம்.ஆர். ராதா தன்னைச் சுட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு முன் “ராதா அண்னனுக்கு” சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வண்டியில் ஏறினார் என்பார்கள். எம்.ஜி.ஆர். சொன்னார் என்பதற்காகவே குடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கிறார்கள்.

    இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் எம்.ஜி.ஆர்.

    காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்றுகிறது. இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்கு உரியது. சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் சாத்தியப்படும் காட்சி எல்லைக்கு உட்பட்டது. சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்திற்கு ஏற்பப் பெரிதாகவோ சிறியதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். ஒன்றை அண்மையிலோ அல்லது தொலைவிலோ வைத்துக் காட்டலாம். ஒலியை அமைக்கும் விதத்தை மாற்றலாம்.


    திரையில் உருப்பெறும் காட்சிப் படிமங்களும் அதற்கான ஒளி, ஒலி அமைப்புகளின் சேகரமும் இணைந்து பலவாறான தாக்கங்களை எழுப்புகின்றன. பார்ப்பவரைப் பொறுத்து இந்தத் தாக்கங்கள் மாறினாலும் இவற்றில் பொதுமைப்படுத்தக்கூடிய தன்மைகளும் இருக்கின்றன. உதாரணமாக ஒரு நாயகனைக் கீழிருந்து மேலே காட்டும் கோணத்தில் காட்டும்போது அவரது வலிமை குறித்த எண்ணம் பார்வையாளர் மனதில் வலுப்பெறுகிறது.

    தனியாக நிற்கும் ஒருவர் சட்டகத்தின் ஓரமாகக் காட்டப்பட்டால் முகம் தெரியாத நிலையிலும் அவர் சற்றே சோகத்தில் அல்லது தனிமை உணர்வில் இருப்பதாக உணர முடியும். கோமாளியாக ஒருவரைக் காட்ட வேண்டும் என்றால் அவர் முகத்தை அண்மைக் காட்சியில் சற்றே வக்கரித்த முறையில் காட்டினால் போதும். காதல், பாசம், பாலுணர்வு போன்ற அம்சங்களை உணர்த்தவும் காட்சிப் படிமங்களின் தன்மைக்குப் பெரும் பங்கு உள்ளது.

    இப்படிப் பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.

    இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப் பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், சமூகப் போராளி, சீர்திருத்தவாதி, நல்லவர்களைக் காத்து அல்லவர்களை ஒடுக்குபவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன்…. இப்படி எத்தனை எத்தனை பிம்பங்கள்.

    இந்தப் பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன. “என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம். “அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.

    எதிரிகளைப் பந்தாடும் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.

    “நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். “நான் ஆணையிட்டால்” என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

    காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.

    சிவாஜியுடன் நடிப்பில் போட்டிபோடும் விருப்பம் எம்.ஜி.ஆர். என்னும் நடிகனுக்கு இருந்திருக்கக்கூடும் என்பதை 50, 60களில் வெளியான சில படங்கள் உணர்த்துகின்றன. ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்‌ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிபாடுகளாக மாறத் தொடங்கின.

    இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணருவோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

    திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.

    திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. இதுவே திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆகப் பெரிய சாதனை.

    Posted by விழியே பேசு... at 11:06 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
View mobile version
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ▼  December (465)
      • 2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ...
      • 2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்
      • இமான் இசையில் பாட்டு பாடிய அனிருத்
      • டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவ...
      • பிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடி...
      • ஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவ...
      • அஞ்சாதே 2-ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின்?
      • டோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... வி...
      • ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: புல்வெள...
      • ஐ படத்தில் எத்தனை கேரக்டர்கள்? : விக்ரம் பதில்
      • உத்தமவில்லன் டிரெய்லர் எப்போது : கமலஹாசன் பேட்டி
      • நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வர...
      • ஐ படக் கதையை முதலில் சொன்னது யாருக்கு ! - ஷங்கர் வ...
      • அண்மை செய்தி : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிற...
      • ஆன்மிக ரூட்டில் அஜித்! வியக்கும் விவேக்
      • அனுஷ்காவின் ‘காதலும்.. முத்தமும்..’
      • நான் விளையாடிய கேப்டன்களிலேயே டோனி தான் சிறந்த கேப...
      • கமலோடு சேர்ந்து மலேசியா செல்லும் விஜய் எதற்கு...?
      • நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விம...
      • பொங்கல் ரேசில் இருந்து விலகிய காக்கி சட்டை?
      • போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அ...
      • இலங்கை அரசியலில் இருந்து சல்மான் கானை வெளியேறச் சொ...
      • தோனியின் மவுனமான வெற்றி! ஒரு பார்வை !!
      • மேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது: சார்மி
      • கோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு!
      • அடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள்!
      • ' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விம...
      • சூப்பர் ஸ்டார்வரை ரீச்சான டயலாக் - சந்தானம்
      • செங்கல்பட்டில் கன்னிப் பெண் நிர்வாணமாக நிற்க சொன்ன...
      • அதிக ரன்கள்...சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி!
      • இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பாடிய நடிகர் ஜீவா
      • நாளை சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள...
      • இளையராஜாவுக்கு திமிர், 25 லட்சம் சம்பளம் வாங்குற ச...
      • டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட்...
      • நேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை? ஆர்.எஸ்.எஸ். உ...
      • ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமானது விசாரணை கமி...
      • மீண்டும் பெங்களூரில் குண்டு வெடிக்கும்... டிவிட்டர...
      • 6½ கோடி ஆண்டு முட்டை, எடை தாங்காமல் இறந்த கழுதை கு...
      • வைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்!
      • ஏர்டெல்: இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வித...
      • ஜனவரியில் திரைக்கு வரும் கவுண்டமணியின் 49 ஓ
      • பெங்களூர் குண்டு வெடிப்பில் பலி: சென்னை பெண் பவானி...
      • மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக்
      • மீண்டும் 'மருதநாயகம்' தொடங்குகிறார் கமல்ஹாசன்
      • பிகே படத்தை திரையிட்ட தியேட்டர்கள் இன்று அடித்து ந...
      • நீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. ...
      • விஜய்யோடு இணையும் சசிகுமார்
      • அஜீத் படத்தை கிண்டலிடிக்கும் வர்மா
      • தி இண்டர்வியூ திரைப்படம் இணைய வருமானத்தில் சாதனை
      • காதலருடனான அந்தரங்க புகைப்படம் - நடிகையே வெளியிட்டார்
      • டோனி, ராய்லட்சுமி காதல்: 'டோனிக்கு பிறகு வேறு தொடர...
      • என்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீடு!
      • ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் இலங்கையில...
      • வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரபு
      • எவனாயிருந்தாலும் வெட்டுவேன்: அஜித், விக்ரமை சீண்டி...
      • தனுஷ், அமிதாப் பச்சனின் 'ஷமிதாப்' -ஆடியோ டிரைலர்!
      • மைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் விஜய்
      • சென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 15 வயத...
      • புத்தாண்டில் என்னை அறிந்தால் பாடலுடன் அஜித் தரும் ...
      • பிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்
      • புத்தகங்களைத் தொடாதீர்கள்! - இயக்குநர் மிஷ்கின்
      • ஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா
      • கோட்சேவுக்கு தமிழகத்தில் சிலை வைக்கும் முயற்சி
      • 400 சீடர்களின் ஆண்மையை பறித்தேனா?: நிரூபித்தால் என...
      • விஜய், அஜித், சூர்யா என யாருமே வேண்டாம்!
      • ஹாலிவுட் எதிர்பார்க்கும் கிறிஸ்மஸ் ஜாக்பாட்
      • பெங்களூரில் குண்டுவெடிப்பு - சென்னை பெண் பலி (அண்ம...
      • மதுரையில் அழிக்கப்பட்ட பொக்கிஷ மலை: சகாயத்தின் வி...
      • பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு
      • நாடு முழுவதும் 1,058 எம்எல்ஏக்கள்: பாஜக-வின் சாதனை
      • நயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிவகார்த்திக...
      • மசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் ...
      • ரிப்பீட் ரிவிட் இசையமைப்பாளர்கள்!
      • தனுஷுக்கு ஜோடியான சமந்தா!
      • பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட...
      • 155 பயணிகளுடன் நடுவானில்... மீண்டும் ஒரு விமானம் ம...
      • 'இனி உங்க மொபைல்ல எந்நேரமும் சார்ஜ் இருக்கும் !'
      • பிரசாந்த் படத்தில் சிம்பு
      • ‘ஆன்ட்டி என அழைத்தால் மூக்கை உடைப்பேன்’ ; பிரேம்ஜி...
      • கிளு கிளுப்பா - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன...
      • எங்களை யாரும் பிரிக்க முடியாது! தடைகளைத் தாண்டிய க...
      • `நானே நீதிமன்றம்... நானே நீதிபதி!` - தாவூத் இப்ராகிம்
      • பா.ஜ.க எதிர்க்கும் பிகேயை பாராட்டிய அத்வானி
      • கட்சியில் சேர ரஜினி மறுப்பு! பழிவாங்கும் பா.ஜ.க !!...
      • பிரபல தமிழ் நடிகையின் நிர்வாண படங்கள் இணையத்தில் வ...
      • 'என்னை அறிந்தால்' பாடல்கள் விவரம்...
      • கமல் டூப்புடன் விஷால்
      • சர்வதேச திரைப்பட விழா... குற்றம் கடிதல் படத்திற்கு...
      • 'மைக்' மோகன் கதையில் நடித்த தனுஷ்
      • கே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்!
      • ஆஸ்கர் ஆறுதல்
      • காந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை...
      • சன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது
      • மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா ப...
      • லிங்கா மூலம் கோடிகளைக் குவித்த தியேட்டர்காரர்கள் ம...
      • ஆழிப்பேரலையின் அழியாத சோகச்சுவடுகள்
      • கிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும...
      • கிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
      • எம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை
      • 'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்-...
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.