Monday, November 1, 2010

எந்திரனில் சங்கர் செய்த மாபெரும் பிழை ....



எந்திரன் வெளியான தினம் சாதரணமாக திரைப்படங்கள் வெளிவரும் நாளாகவா இருந்தது இல்லவே இல்லை ... அது ஒரு திருவிழா நாள் போன்று தான் தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டது.  ராமஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு வெளிவரும் தருணம் நாடே அந்த வழக்கின் தீர்ப்பை பற்றி பேச ஆதைஎல்லாம் தூக்கி சாபிட்டு விட்டு இந்திரன் பேச்சு தான் மேலோங்கி நிற்கும் அளவுக்கு இந்திரன் செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதை விட முகியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது தான் உண்மை . 160  கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவின் முதல் விஞ்ஞான திரைப்படமாக வெளிவந்து உலகெங்கும் 3000   திரியாரங்குகளில் திரையிடப்பட்டு இன்று ஆனைத்து இந்திய மொழி திரைப்படங்களின் சாதனைகளையும் முறியடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் எந்திரனில் சங்கரின் கவனக்குறைவால் ஒரு மாபெரும் தவறு நடந்து உள்ளது .அவை ...

    வசீகரனால் செயல் இழக்க செய்து வீசப்படும் சிட்டி ரோபோவை கைபற்றும் ப்ரோப்பசர்    குணா    அதுக்கு நூறு மனிதர்களோட அழிக்கும் சக்தியை கொடுக்கும் பொது இப்படி பேசுகிறார் " பிஸ்னஸ் என் பிஸ்னஸ் கு இவன்தான் வெள்ளோட்டம் ....பலன்  எனக்கு பழி டாக்டர் வசீகரனுக்கு .." இப்படி பேசுவார் வீடியோ இணைத்துள்ளேன் பார்க்கவும் ....


இறுதியில் நீதிமன்ற கட்சியில் ரோபோ பேசும் பொது " நடந்த தவறுக்கெல்லாம் காரணம் வசீகரன் இல்லை  ப்ரோப்பசர்  போஹ்ரா தான் அதுக்கு என்கிட்ட ஆதாரம்  இருக்கு " என்று கூறி தனது மெமரியிலிருந்து போட்டு காட்டும் வீடியோ காட்சியில் " பலன் எனக்கு பழி அந்த வசீகரனுக்கு " என்று காட்டப்படுகிறது டாக்டர் வசீகரன் அந்த வசீகரனாக மாறி விடுகிறார் .வீடியோ இணைத்துள்ளேன் பார்க்கவும் ....


இது சின்ன தவறுதான் எண்டாலும் நீதிமன்ற காட்சியல்லவா அது மட்டுமா ரோபோவே இப்படி மாற்றி சொல்லலாமா ....
சங்கர் சார் உங்களின் அடுத்தடுத்த படைப்புகளில் இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்....


ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...

இன்று பீகார் நான்காம் கட்ட தேர்தலில் துப்பாகியுடன் அலைந்த லாலு பிரசாத் யாதவ் ( சுட சுட செய்தி )

சிலர் பிரபலம் ஆவதற்கு பிரபலங்களை வம்புக்கு இழுத்து பிரபலம் ஆவது உண்டு . சில பிரபலங்கள் மக்கள்  தங்களை மறந்து விட கூடாது என்பதற்காக தான் உண்டு தன் வேலையுண்டு என்று சிவனே என்று இருக்கும் பிரபலங்களையும் வம்புக்கு இழுத்து தன் தொண்டர்கள் மூலமாக தன்னை பிரபலமாகி கொள்ளும் பிரபலங்களும் உண்டு . ஆனால் நம்ம ஹீரோ லொள்ளு மன்னன் லாலு பிரசாத் யாதவ் தனல்லு தானே ஏதாவது நையாண்டித்தனம், கோமாளித்தனம் அல்லது முள்ளமாரிதனமான காரியங்கள் செய்து பிரபலமாகி விருவர் அவரிடம் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது . அட ..இப்போ என்னங்க பண்ணிடாரு விஷயத்துக்கு வாங்கனு நீங்க சொல்லுறது கேட்குதுங்க சரி சரி விஷயத்துக்கு வரேன் ....
இப்போது பீகாரில் சட்டசபைக்கு தேர்தல் நடந்து கொண்டு இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே ..? மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்து இன்று நான்காம் கட்ட தேர்தல் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தேர்தல் நடைபெறும் பகுதிகளை பார்வை இட சென்ற நம்ம லாலு பிரசாத்யாதவ் "துப்பாக்கி"   ஏந்திய பாதுகாவலரோட போயடாருங்க எல்லாவரும் தேர்தல் அதிகாரிங்க தடுத்தும் கேட்கவே இல்லையாம் . அப்புறம் என்ன தேர்தல் விதிமுறை மீறல்னு வழக்குதான் போடமுடியும் போடிடான்கலாம். லாலுக்கு என்ன தெரியாத இப்படி பண்ணினா வழக்கு போடுவாங்கன்னு தெரியும் தான் ஆனாலும் ஏன் இப்படி பண்ணினாரு எல்லாம் தேர்தல் பரப்பரப்புக்கு தான் . பூனா போகுது வழக்குத்தானே போங்கடான்னு போய்டாரு நம்மாளு சந்திக்காத வளக்காங்க மாட்டுக்கு தீவனம் வாங்கினதிலையே கைவசிட்டோம் அப்புறம் இந்த வழக்கெல்லாம் ஒரு வளக்கா சுசுப்பி........
( மாடு இந்த தீவனத்தை தின்னு இவ்ளோ கொழு கொழுன்னு இருக்கு இவ்ளோ  பால் கொடுக்குதே நாமும் மாட்டு தீவனம் சாப்பிடலாம்னு தாங்க கைய வச்சாரு அதுக்குள்ளே புடிசிடான்களே இந்த பாவி பசங்க ....)



ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ....