விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, May 1, 2012

    மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை ஏற்க எதிர்ப்பு: ஆதீனங்கள் அவசர ஆலோசனை


    மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்துள்ளார். இதைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்திற்கு உடனடியாக ரூ.5 கோடி நிதியையும் மேலும் பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார் நித்யானந்தா.
     
    இந்நிலையில் மதுரை ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடம் ஆகும். இதில் ஆதீனத்தை நியமிக்க விதிமுறைகள் உள்ளன. அதனை மீறி மதுரை ஆதீனம் செயல்பட்டது மற்ற ஆதீனங்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.
     
    இதுகுறித்து ஆதீனங்களிடம் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த ஆதீனங்களும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.   இந்நிலையில் இது குறித்து தருமபுரம் ஆதீனம் சண்முகதேசிக சுவாமிகள் தலைமையில் இன்று மாலையில் தருமபுரத்தில் உள்ள ஆதீனம் கலைக்கல்லூரியில் அனைத்து ஆதீனங்களைக் கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
     
    இதில் திருவாவடுதுறை ஆதீனம், பேரூர் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், வடலூர் ஊரனடிகள் சுவாமிகள் உட்பட மேலும் பல்வேறு சுவாமிகள் கலந்து கொள்கின்றனர்.
     
    கூட்டத்தில் மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை விதிமுறைகளை மீறி நியமித்தது குறித்து ஆதீனங்கள் காரசாரமாக விவாதிக்கின்றனர். மேலும் முக்கிய முடிவுகளும் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     
    ஆதீனங்களின் ஒன்று திரண்ட அணிவகுப்பு மதுரை ஆதீன செயல்களுக்கு கடும் எதிர்ப்பாகவே இருக்கும் என ஆன்மீக அன்பர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


    Posted by விழியே பேசு... at 3:48 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    ஜனாதிபதி தேர்தலில் சோம்நாத் சட்டர்ஜியை நிறுத்த தி.மு.க. சிபாரிசு: காங்கிரஸ் கட்சி ஏற்குமா?


    ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை 25-ந்தேதி முடிவடைவதால், ஜூலை முதல் வாரத்தில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது.
    தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோரில் ஒருவரை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சபாநாயகர் மீராகுமார், கரன்சிங் மற்றும் சோனியாவின் குடும்ப நண்பர் ஒருவரது பெயரும் காங்கிரசாரிடம் பரிசீலினையில் உள்ளது.  
    காங்கிரஸ் நிறுத்தும் எந்த வேட்பாளரையும் ஏற்கமாட்டோம் என்று பா.ஜ.க. திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சமாஜ்வாடி, அ.தி. மு.க., தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் களம் இறக்க திட்டமிட்டுள்ள அப்துல் கலாமை ஆதரிக்கத் தயார் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
    காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டுமே தன்னிச்சையாக ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய முடியாது என்பதால், மாநில கட்சிகளின் முடிவையே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல மாநில கட்சிகள் கூறி இருப்பதால், இப்போதைக்கு பலரது பெயர்கள் ஜனாதிபதி பதவிக்கு யூகத்தின் அடிப்படையில் பேசப்பட்டு வருகிறது.  
    பா.ஜ.க. மற்றும் சில மாநில கட்சிகளின் மனதில் அப்துல்கலாமே உள்ளார். இதில் ஒருமித்த கருத்து ஏற்படாதபட்சத்தில் பஞ்சாப் முதல்-மந்திரி பாதலை பா.ஜ.கவும், மாநில கட்சிகளும் சிபாரிசு செய்யலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
    எனவே மாநில கட்சிகள், அந்த கட்சிகளை ஆதரிக்கும் பா.ஜ.க. விஷயத்தில் அதிக குழப்பம் இல்லை. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஜனாதிபதி பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பதில் கடும் குழப்பம் நீடிக்கிறது.
    துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை நிறுத்தினால் இடது சாரி கட்சிகளின் ஒட்டு மொத்த ஆதரவு கிடைக்கும். ஆனால் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஒத்துழைக்க மாட்டார். அவரை சமாளிக்க பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி பதவிக்கு களம் இறக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பிரணாப் முகர்ஜியை இடது சாரிகள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகம்.
    எனவே காங்கிரஸ் தலைவர்கள் இரு தலைகொள்ளி எறும்பாக தவிக்கிறார்கள்.   இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    அப்போது முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சட்டர்ஜி பெயரை தி.மு.க. சிபாரிசு செய்தது. சோம்நாத் சட்டர்ஜி எல்லா கட்சி தலைவர்களுடனும் சுமூகமாக பழகுபவர். மூத்த தலைவர் என்பதோடு நன்கு அனுபவம் பெற்றவர் என்ற பலமும் அவரிடம் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் மம்தா பானர்ஜி அவரை மண்ணின் மைந்தர் என்று ஆதரிக்க வாய்ப்புள்ளது.
    எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் இடதுசாரி கட்சிகளையும் ஒரே பாதையில் கொண்டுவர சோம்நாத் சட்டர்ஜிதான் சரியான நபராக இருப்பார் என்று தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
    இதற்கிடையே சோம்நாத் சட்டர்ஜிக்கு இடதுசாரி கட்சிகளிடம் ஒருமித்த ஆதரவு கிடைக்குமா? என்று தெரியவில்லை. மேலும் சோம்நாத் சட்டர்ஜியை விரும்பாத மற்ற மாநில கட்சிகள் பா.ஜ.க.வுடன் ஓரணியில் திரள வாய்ப்புள்ளது. இத்தகைய காரணங்களால் சோம்நாத் சட்டர்ஜியை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பார்களா? என்பதில் இழுபறி நீடிக்கிறது.


    Posted by விழியே பேசு... at 11:59 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    தூக்குத் தண்டனையை குறைக்க வேண்டும்: ராஜீவ் கொலையாளிகள் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்


    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன். இவர்கள் கருணை மனுவை கடந்த வருடம் ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். எனவே இதை எதிர்த்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக தாங்கள் சிறையில் இருப்பதால் தூக்குத் தண்டனையை குறைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.
     
    இந்த வழக்கை நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் விசாரித்து 3 பேரையும் தூக்கில் போட இடைக்கால தடை விதித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த வெங்கடேஷ் என்பவர் இந்த மனுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும் என்றும், மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.
     
    இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் இந்த மனுவை விசாரிக்க முடிவு செய்தது. அதன்படி, இந்த வழக்கு சிங்வி தலைமையிலான நீதிபதிகள் கொண்ட  பெஞ்ச் முன் மே 10-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.


    Posted by விழியே பேசு... at 11:52 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    அசாம் படகு விபத்து: சாவு எண்ணிக்கை 103 ஆக உயர்வு


    அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தின் வழியாக பிரம்மபுத்திரா ஆறு ஓடுகிறது. இந்தப் பகுதி மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படகு போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். நேற்று மாலை 4 மணி அளவில் துப்ரி பகுதியில் இருந்து ஹத்சிங்கி மரிநோக்கு பிரம்மபுத்திரா ஆற்றில் படகு சென்று கொண்டு இருந்தது.

    அதில் குழந்தைகள் பெண்கள் என 250 முதல் 300 பயணிகள் வரை இருந்தனர். ஆற்றின் நடுப்பகுதியில் சென்றபோது மோசமான வானிலை நிலவியது. பலத்த சூறாவளியுடன் மழை பெய்தது. இதில் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் ஆற்று வெள்ளத்தில் தத்தளித்தனர். நீச்சல் தெரிந்த 25 பேர் மட்டும் நீந்தி கரை சேர்ந்தனர். அவர்கள் படகு கவிழ்ந்தது பற்றி மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. உள்ளூர் தீயணைப்பு படையினர் போலீசாருடன் இணைந்து படகுகளில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே மிதந்தது. உடனடியாக 37 பிணங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றது. இன்று காலை வரை 103 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், படகில் பயணம் செய்த 100-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் தடுப்பு படை பிரிவும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. படகில் 300 பேர் வரை பயணம் செய்துள்ளனர். 25 பேர் மட்டுமே உயிருடன் திரும்பியுள்ளனர். எனவே சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று மாவட்ட துணை கமிஷனர் குமுசந்திரக கவிதா கூறினார். படகு விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

    படகு விபத்து பற்றி விசாரணை நடத்த மாநில முதல்-மந்திரி அருண் கோகாய் உத்தவிட்டுள்ளார். இந்த விபத்து நடந்த அதே நேரத்தில் ஜாலேஸ்வர் என்ற இடத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் சென்ற மற்றொரு படகும் கவிழ்ந்தது. இதில் 12 பேர் பலியானர்கள். இந்தப்பகுதியில் சூறாவளியுடன் மோசமான வானிலை நிலவுவதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதை கவனிக்காமல் சென்றதால் இந்த கோர சம்பவம் நடந்ததாக மாவட்ட துணை கமிஷனர் கவிதா கூறினார்.


    Posted by விழியே பேசு... at 11:32 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட உலக வர்த்தக மைய கட்டிடம் நியூயார்க்கில் மீண்டும் உதயம்


    a
    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘எம்பயர் ஸ்டேட் பில்டிங்’ என்ற பெயரில் உலக வர்த்தக மைய கட்டிடம் இருந்தது. இரட்டை கோபுரம் என்று அழைக்கப்பட்ட அந்த கட்டிடம் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்று இருந்தது.
     
    கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி அந்த கட்டிடத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோத வைத்து தகர்த்து தரை மட்டமாக்கினர். இதில் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  
     
    உலக பெருமை வாய்ந்த அந்த கட்டிடத்தை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நியூயார்க்கில் மீண்டும் இரட்டை கோபுரங்களுடன் வர்த்தக மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதில், ஒரு கட்டிடம் 1250அடி (381 மீட்டர்) உயரத்திலும், மற்றொன்று 1,776 அடி (541.3 மீட்டர்) உயரத்திலும் கட்டப்படுகிறது.
     
    அதில் 1250 அடி உயர கோபுரம் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளது.   மற்றொரு கோபுரம் அடுத்த ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிடம் 104 அடுக்குமாடிகளை கொண்டதாக கட்டப்படுகிறது. இதன் மூலம் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் எந்த அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது.


    Posted by விழியே பேசு... at 11:30 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    'டீல்'.... ஜனாதிபதி பதவி காங்கிரசுக்கு.. துணை ஜனாதிபதி பதவி பாஜகவுக்கு..!


    ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை வெற்றி பெற வைக்க பாஜக சொல்லும் நபரை துணை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் இரு கட்சிகளுமே வெளியில் நாடகம் போட்டாலும், உள்ளுக்குள் அவர்களிடையே 'டீல்' ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    வரும் ஜூலை மாதத்தில் ஜனாதிபதி தேர்தலும், ஆகஸ்ட் மாதத்தில் துணை ஜனாதிபதி தேர்தலும் நடக்கவுள்ளது.

    எல்லா கட்சிகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால் தவிர இந்தப் பதவிகளுக்கு பொது வேட்பாளர் நிறுத்தப்பட வாய்ப்பில்லை.

    இந்த இரு பதவிகளுக்குமே யாரையும் தேர்ந்தெடுக்கும் தனிப்பட்ட பலம் மத்தியில் ஆளும் காங்கிரசுக்கோ, எதிர்க் கட்சியான பாஜகவுக்கோ இல்லை. கூட்டணிக் கட்சிகளும், நடுநிலையில் உள்ள முலாயம் சிங், மாயாவதி, லாலு பிரசாத் போன்றோரும் ஆதரித்தால் மட்டுமே காங்கிரசால் தனது வேட்பாளரை வெல்லச் செய்ய முடியும்.

    அதே போல கூட்டணிக் கட்சிகளும் கூட்டணியில் இல்லாத தமிழக முதல்வர் ஜெயலலிதா போன்றவர்களும் ஆதரித்தாலும் கூட பாஜகவாலும் அவ்வளவு எளிதாக தனது வேட்பாளரை நிறுத்தி ஜெயிக்க வைத்துவிட முடியாத நிலை உள்ளது.

    இதனால் காங்கிரசுக்கு பாஜகவின் உதவியும், பாஜகவுக்கு காங்கிரசின் உதவியும் நிச்சயம் தேவை. இந்த உதவிகளை நேரடியாக செய்து கொண்டால் 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அது பாஜகவுக்கு எதிரானதாக முடியும். பதவிக்காக காங்கிரசுடன் அந்தக் கட்சி கைகோர்த்ததாக பெயர் வந்துவிடும்.

    இந்தப் பெயர் வந்துவிடாமல் தவிர்ப்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. இதனால் மறைமுகமாக ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள காங்கிரசும் பாஜகவும் தயாராகி வருகின்றன.

    இதன் முதல் கட்டமாக ஜனாதிபதி பதவிக்கு தனது வேட்பாளரையும், துணை ஜனாதிபதி பதவிக்கு பாஜக சொல்லும் நபரையும் நிறுத்த காங்கிரஸ் முன் வந்துள்ளது. இதை பாஜகவும் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

    இந் நிலையில், துணை ஜனாதிபதி பதவிக்கு சிரோன்மணி அகாலி தளம் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலின் பெயரை காங்கிரசிடம் பாஜக முன் வைத்துள்ளது.

    இதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் ஜனாதிபதி பதவிக்கு பாஜக யாரையும் நிறுத்தாது, காங்கிரஸ் முன்மொழியும் வேட்பாளரை ஏற்கும் அல்லது எதிர்க்காமல் நடுநிலை வகிக்கலாம் என்று தெரிகிறது.

    இதன்மூலம் காங்கிரசுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்ற பெயரும் பாஜகவுக்குக் கிடைக்கும்.

    காங்கிரஸை பொறுத்தவரை தான் நிறுத்தும் வேட்பாளரை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இதனால் பாஜகவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே எந்த டீலும் செய்து கொள்ள அந்தக் கட்சித் தயாராகவே உள்ளது.

    நடுநிலை வகிக்கும் கட்சிகளில் முலாயம் சிங் யாதவையும், கூட்டணிக் கட்சிகளில் மம்தா பானர்ஜியையும் தனது வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டால், பிரச்சனையில்லாமல் வென்றுவிடலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது.

    முலாயம் சிங் யாதவைப் பொறுத்தவரை கடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வர உதவிய முஸ்லீம்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அப்துல் கலாமை நிறுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். கலாமுக்கு பதில் இன்னொரு இஸ்லாமியரான அன்சாரியை நிறுத்தி அவரை ஆதரிக்குமாறு காங்கிரஸ் கோரினால் அதை அவர் ஏற்பார் என்றே தெரிகிறது.

    மம்தா பானர்ஜியைப் பொறுத்தவரை மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி தர வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் அவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூறி வருகிறார். இந்த விஷயத்தில் மத்திய அரசு விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், அவர் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பார்.


    Posted by விழியே பேசு... at 11:23 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    கடத்தப்பட்ட கலெக்டர் நாளை விடுதலை- மாவோயிஸ்டுகள் முடிவு


    சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடந்த 21-ந்தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டுமானால் சிறைகளில் உள்ள 17 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.

    மாவோயிஸ்டு பிரதிநிதிகளுடன் சமரச பேச்சு நடத்துவதற்காக சத்தீஸ்கர் மாநில முதல்- மந்திரி ராமன்சிங் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மாவோயிஸ்டுகள் சார்பில் பேச ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டி.சர்மா, ஐதராபாத் பேராசிரியர் ஹர் கோபால் இருவரும் தேர்வானார்கள். அவர்கள் காட்டுக்குள் சென்று மாவோயிஸ்டுகளுடன் பேசினார்கள். முதல் 3 சுற்று பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

    கடந்த சனிக்கிழமை அவர்கள் மீண்டும் மாவோயிஸ்டுகளை சந்தித்து பேசினார்கள். நேற்று ராய்ப்பூர் திரும்பிய அவர்கள் சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரி ராமன் சிங் தலைமையிலான 5 பேர் குழுவிடம் பேச்சு நடத்தினார்கள். ராமன்சிங் வீட்டில் இந்த பேச்சு வார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அந்த உடன்பாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது 2 பக்க பத்திரமாக தயாரிக்கப்பட்டது. அந்த பத்திரத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

    அரசுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் முடிவு செய்துள்ளனர். 2-ந்தேதிக்குள் அவர் பத்திரமாக வந்து சேர்வார் என்று மாவோயிஸ்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதை சத்தீஸ்கர் முதல்-மந்திரி ராமன் சிங்கும் உறுதி செய்தார். கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் எந்த நேரத்திலும் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றிரவு அல்லது நாளை அதிகாலை அவர் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. மாவோயிஸ்டுகளின் இந்த முடிவால் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 17 பேரை விடுதலை செய்தால்தான் கலெக்டரை விடுவிப்போம் என்று  கூறி வந்த மாவோயிஸ்டுகள் மனம் மாறியது ஏன் என்பதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளன.

    கலெக்டர் அலெக்சை கடத்தியது மாவோயிஸ்டு மூத்த தலைவர்களில் சிலருக்கு பிடிக்கவில்லையாம். மாவோயிஸ்டுகளுக்கு கிராம மக்களிடம் உள்ள இமேஜை கலெக்டர் கடத்தல் விவகாரம் பாழ்படுத்தி விடும் என்று அவர்கள் எச்சரித்தார்களாம். இதையடுத்தே கலெக்டரை விடுவிக்க, மாவோயிஸ்டுகள் முன் வந்ததாக கூறப்படுகிறது. வெறுமனே விடக் கூடாது என்பதற்காகத்தான் மாவோயிஸ்டுகள் மீதான வழக்குகள் பற்றி ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.

    இந்த கோரிக்கையை சத்தீஸ்கர் முதல்-மந்திரி ராமன்சிங் ஏற்றுக் கொண்டார். கலெக்டர் விடுவிக்கப்பட்ட உடனேயே இந்த உயர் மட்டக்குழு அமைக்கப்படும். அவர்கள் மாவோயிஸ்டு தலைவர்கள் மீதான வழக்குகளை ஆய்வு செய்து விரைவில் விடுதலையாக உதவு வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சிறைகளில் உள்ள மாவோயிஸ்டுகள் யாரும் விடுதலை செய்யப்படாமலேயே கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் மீட்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    Posted by விழியே பேசு... at 11:16 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ▼  2015 (650)
    • ▼  August (1)
      • புலி பட பாடல்கள் டவுன்லோட் (Puli Tamil Movie Songs...
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.