Tuesday, May 1, 2012

திமுக எடுத்த முடிவு: கவலையில் அதிமுகவினர்!


புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஜூன் 12 ந் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் மற்ற கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கும் முன்பே அ.தி.மு.க மட்டும் வேலைகளை தொடங்கி பஞ்சபாண்டவர்களாக 5 அமைச்சர்களை அனுப்பி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.


 இந்த நிலையில் தொகுதியை வைத்திருந்த சி.பி.ஐஇடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து தி.மு.க தலைமையும் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.




 இந்த போட்டியில்லை என்ற அறிவிப்புகள் அ.தி.மு.க வினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத் தியுள்ளது.

 இது பற்றி அ.தி.மு.க வினர் கூறும் போது,   இடைத்தேர்தல் என்றால் பணத்திற்கு பஞ்சமில்லாத களமாக இருக்கும். ஆளும்கட்சியினருக்கு திருவிழா கொண்டாட்டமாக இருக்கும்.

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் பொதுமக்கள் தெரிந்து கொண்டார்கள். அதே போல புதுக்கோட்டை இடைத் தேர்தலும் பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்று கட்சிகாரர்கள் பெரும் மகிழ்சியில் இருந்தோம்.


 ஆனால் தொகுதியை வைத்திருந்த சி.பி.ஐ யும் நிற்கவில்லை என்ற அறிவித்தவிட்டது. அடுத்து தி.மு.க வும் இதே நிலை எடுத்தால் எங்கள் இடைத்தேர்தல் திருவிழா கொண்டாட்டம் நடக்காது.

இப்பவே பெரிய கனவுகளோடு தேர்தல் களத்திற்கு தயாராகி விட்டோம்.  ஆனால் இனி எங்க கட்சி மேலிடம் கூட பணம் கொடுக்காதே அப்பறம் எப்படி எங்கள் கனவு நிறைவேறும் என்று கவலையுடன் கூறியதுடன். தி.மு.க போட்டிக்கு வந்தால் நிச்சயம் எங்கள் கனவு நிறைவேறும் என்றும் கூறுகின்றனர்.


நித்யானந்தாவுக்கு ஆதீனங்கள் வைத்த ஆப்பு.....


மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்துள்ளார். மதுரை ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடம் ஆகும்.
 
இதில் ஆதீனத்தை நியமிக்க விதிமுறைகள் உள்ளன. அதனை மீறி மதுரை ஆதீனம் செயல்பட்டது மற்ற ஆதீனங்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.  
 
இந்நிலையில் இது குறித்து தருமபுரம் ஆதீனம் சண்முகதேசிக சுவாமிகள் தலைமையில் இன்று மாலை தருமபுரத்தில் உள்ள ஆதீனம் கலைக்கல்லூரியில் அனைத்து ஆதீனங்களைக் கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
இதில் திருவாவடுதுறை ஆதீனம், பேரூர் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், வடலூர் ஊரனடிகள் சுவாமிகள் உட்பட மேலும் பல்வேறு சுவாமிகள் கலந்து கொண்டனர்.
 
இந்தக் கூட்டத்தில், நித்தியானந்தா விவகாரம் பலத்த எதிர்ப்புகளைக் கிளப்பியது. அப்போது பேசிய பலரும், நித்தியானந்தா நியமனத்தை இன்னும் பத்து தினங்களுக்குள் மறுபரிசீலனை செய்து மதுரை ஆதினம் அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லை என்றால், இது தொடர்பாக அனைத்து ஆதீனங்களும் சேர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி செய்வோம். இது தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு சுமூகத் தீர்வு காண வலியுறுத்துவோம் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தூங்கிய பெண்ணிடம் கணவர் போல படுத்து உல்லாசம்


சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ராமலட்சுமி (வயது41). கடந்த 22-ந்தேதி இரவு மாரியப்பனும், ராம லட்சுமியும் அருகருகே படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.
 
அப்போது பின் பக்க கதவு திறந்து இருந்ததால், பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் செல்வராஜ் நைசாக உள்ளே நுழைந்தார். மாரியப்பனின் அருகே படுத்திருந்த ராமலட்சுமியை பார்த்தும் செல்வராஜுக்கு சபலம் ஏற்பட்டது. அவரும் ராமலட்சுமியின் கணவர் போல அருகில் படுத்து ராமலட்சுமியை கட்டி பிடித்து உல்லாசம் அனுபவிக்க தொடங்கினார்.
 
தூக்க கலக்கத்தில் இருந்த ராமலட்சுமி இருட்டில் முகத்தை சரியாக கவனிக்காமல் கணவர் தானே என்று விட்டு விட்டார். திடீர் என்று சினிமா படத்தில் நகைச்சுவை காட்சியில் வருவது போல, அவரது கணவர் திரும்பி படுத்து தனது கையை மனைவி மீது போட்டுள்ளார். அப்போது தான் அவரது மனைவி கூடுதலாக ஒரு “கை” எங்கிருந்து வருகிறது என்று பார்த்த போது அருகில் கணவர் படுத்து தூங்கி கொண்டு இருந்தது தெரியவந்தது.
 
உடனடியாக ராமலட்சுமி அலறி அடித்து எழுந்தார். பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜ் வெளியே ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து ராமலட்சுமி திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வராஜை தேடி வருகிறார்கள்.
 


ரஜினியை அப்பா என்று அழைக்கும் தீபிகா


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கோச்சடையானில் நடிக்கும் தீபிகா படுகோனே அவரை அப்பா என்றே அழைக்கிறாராம்.

இன்றைய தேதிக்கு கோலிவுட், மாலிவுட், டோலிவுட், பாலிவுட் என்று அனைத்து உட்களைச் சேர்ந்த நடிகைகளும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறார்கள். ஏன் நம்ம பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா கூட ரஜினியுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அப்பேர்பட்ட ரஜினியுடன் கோச்சடையானில் ஜோடியாக நடிக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. அவரும், ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். படத்தில் ஜோடியாக நடித்தாலும் கேமராவுக்கு பின்னால் ரஜினியை தீபிகா பாசத்துடன் அப்பா என்றே அழைக்கிறாராம்.

கோச்சடையான் படப்பிடிப்பில் தான் சௌகரியமாக உணர உதவிய சவுந்தர்யாவுக்கு நன்றி தெரிவித்து தீபிகா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதன் மூலம் தான் அவர் ரஜினியை அப்பா என்று அழைப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சவுந்தர்யா டுவிட்டரில் கூறுயிருப்பதாவது,

கேரளாவில் கோச்சடையானின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளோம். தீபிகாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. தீபிகா ஒரு டார்லிங் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு தீபிகாவின் டுவீட்,

சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு நன்றி. அப்பா, அம்மாவுக்கு எனது அன்பை தெரிவிக்கவும், விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

பதிலுக்கு சவுந்தர்யா டுவீட்,

உங்களை இயக்கியதில் மகிழ்ச்சி. விரைவில் சந்திப்போம். அப்பா, அம்மா மற்றும் படக்குழு தங்கள் அன்பை தெரிவித்துக்கொள்கிறார்கள்.


'ஒபாமாவை படுகொலை செய்ய உத்தரவிட்டார் பின்லேடன்'


பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் படுகொலை செய்ய உத்தரவிட்டிருந்தார் பின்லேடன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் என்பிசி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த செய்தியில் கூறுகையில், அபோத்தாபாத் வீட்டில் பின்லேடன் பதுங்கியிருந்தபோதும் தனது தீவிரவாத செயலில் தீவிரமாகவே இருந்துள்ளார். தொடர்ந்து தனது கூட்டாளிகளுக்கு அவர் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வந்துள்ளார். குறிப்பாக அதிபர் ஒபாமா, ராணுவத் தளபதி டேவிட் பெட்ரிஷியஸ் ஆகியோரைப் படுகொலை செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் இத்தகவலைத் தெரிவித்ததாக அந்த செய்தியின் ஆசிரியர் தெரிவித்துள்ளார். பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட் ரெய்டின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலிருந்து இது தெரிய வந்ததாக அந்த ராணுவ அதிகாரி கூறினாராம்.

பின்லேடனைக் கொன்ற பின்னர் அவர் பதுங்கியிருந்த வீட்டிலிருந்து கம்ப்யூட்டர்கள், ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவற்றை அமெரிக்க சீல் படையினர் கைப்பற்றிச் சென்றனர் என்பது நினைவிருக்கலாம்.

இருப்பினும் அதிபர் ஒபாமாவைப் படுகொலை செய்வது தொடர்பான திட்டம் எதுவும் அந்த வீட்டில் இல்லை என்றும், எதிர்காலத் தாக்குதல்கள் குறித்த திட்டங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அந்த செய்தி கூறுகிறது.


ஆபரேஷன் செய்து பெண்ணாக மாறும் 80 வயது தாத்தா


இங்கிலாந்தில் உள்ள சுசக்ஸ் நகரை சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரர் ரூத் ரோஸ் (வயது 79).
 
இவர் ஆபரேஷன் செய்து பெண்ணாக மாற முடிவு செய்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் அவருக்கு 80 வயது பிறக்கிறது. அப்போது இந்த ஆபரேஷனை செய்ய உள்ளார்.
 
தனது 9 வயதிலேயே பெண்ணாக இருக்க ஆசை ஏற்பட்டதாகவும், அதை இப்போது நிறைவேற்ற போவதாகவும் அவர் கூறுகிறார்.
 
இவருக்கு 3 குழந்தைகளும் அவர்கள் மூலம் பேரக்குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.