நடிகர் விஜய் நடித்த காவலன் படம் ஜெயா டி.வி.,க்கு கைமாறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவலன் படத்துக்கு தியேட்டர் கிடைக்காத பிரச்னை ஒரு புறமென்றால், அந்த படத்தில் அசின் நடித்திருப்பது இன்னொரு பிரச்னை... விஜய்க்கு அடுத்தடுத்த தோல்வியும் இந்த பிரச்னைகளுடன் கைகோர்த்துக் கொண்டு தியேட்டர் அதிபர்கள் ரூபத்தில் காவலனுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து உதவி கோரியது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான்.
அந்த சந்திப்பின்போது இன்னொரு உதவியும் காவலனுக்கு கிடைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாகப்பட்டது, புதிய படங்கள் ரீலிஸ் ஆனாலே முன்னணி சேனல்கள் இரண்டு பேர் போட்டி போட்டுக் கொண்டு படங்களை விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள். யானைகளுக்கு நடுவில் எறும்புக்கு என்ன வேலை என நினைத்த மற்ற சேனல்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே நிற்கின்றன. அப்படியே போட்டிக் களத்தில் குதித்தாலும் தோல்விதான் கிடைத்து வந்தது. இந்நிலையில்தான் காவலன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜெயா டி.வி., வாங்கியிருக்கிறதாம். ஆனால் இதுபற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னமும் வெளியிடப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும்கட்சி தொலைக்காட்சிகளுக்கு தொல்லை கொடுக்க எதிர்கட்சி தயாராகி வருவது இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

No comments:
Post a Comment