Saturday, January 29, 2011

நடிகை ரஞ்சிதா பெங்களூர் ராம் நகர் கோர்டில் ரகசிய வாக்குமூலம்


பிரபல நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானதை அடுத்து நித்யானந்தா கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் மீது பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர ரஞ்சிதாவிடம் போலீசார் ஆர்வம் காட்டினர் ஆனார் ரஞ்சிதா தலைமறைவாக இருந்தார்.

இதனால் அது நடக்க வில்லை.  அடுத்து சில வாரம் கழித்து நித்யானந்தா ஜாமினில் விடுதலையானார். பின்னர் ரஞ்சிதா திடீரென்று டிசம்பர் 30-ந்தேதி ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னை பற்றிய வீடியோ போலியானது என்றார் மேலும் அதனை  போலியாக சித்தரித்து வெளியிட்டதாக லெனின் கருப்பன் மீது புகார் கொடுத்தார்.

இந்த புகார் மனு இன்று விசாரணைக்கு வந்தது. ரஞ்சிதா நீதிபதி முன் 30 நிமிடம் ரகசிய வாக்கு மூலம் கொடுத்தார். வாக்குமூலத்தி  தனக்கு லெனின் கருப்பன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கின்றன இந் நிலையில் இந்த வழக்கை நீதிபதி  பிப்ரவரி 19 -ந்தேதி  தள்ளி வைக்க உத்தர விட்டார்.

லெனின் கருப்பன் நித்யானந்தாவிடம் சீடராக இருந்து நடவடிக்கை பிடிக்காமல் வெளியேறியதாக  கூறப்படுகிறது. ரஞ்சிதா தற்போது நித்யானந்தாவின் ஆசிரமத்தில் முதன்மை சீடராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment