Monday, January 31, 2011

ஆர்யா, விஷால் கண்ணாமூச்சு காத்திருக்கும் இயக்குனர்கள்!


'அவன் இவன்' படப்பிடிப்பில் இருக்கிறார்கள் ஆர்யாவும், விஷாலும். கொடுத்த தேதிகளின்படி பார்த்தால் எப்பவோ படப்பிடிப்பு முடிந்து இருவரும் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் எடுப்பது பாலாவாச்சே? ஆரம்பிக்கிற தேதி மட்டும்தான் இவர் கையில். முடிவு எப்போது என்பதை கணிக்க தமிழ்சினிமாவில் இன்னும் யாரும் பிறக்கவே இல்லை என்பதுதான் சகிக்க முடியாத நிஜம்.

இந்த நேரத்தில் விஷாலை வைத்து அடுத்த படத்தை எடுக்க தயாராக இருந்த பிரபுதேவா இரண்டு முறை படப்பிடிப்பை ஒத்தி வைத்து விட்டார். இப்போது அந்த படத்தை இயக்குகிற எண்ணத்தையே கிடப்பில் போட்டுவிட்டதாக தகவல். விஷால் வரும்போது எனது தேதிகள் ஒத்து வந்தால் இயக்குவேன். இல்லையென்றால் இந்த படமே வேண்டாம் என்கிறாராம் கோபம் கோபமாக!

இதில் லிங்குசாமி மட்டும் கொஞ்சம் வித்தியாசம். இவர் இயக்கவிருந்த வேட்டை படப்பிடிப்பும் ஆர்யாவுக்காக வெயிட்டிங். ஆனால் பாலாவுக்கே போன் செய்த லிங்குசாமி, எனக்காக அவசரம் அவசரமா படத்தை முடிக்க வேண்டாம். நிதானமா அனுப்பி வைங்க. அதுவரைக்கும் நான் காத்திருக்கேன் என்றாராம். பாலா படத்தின் ஹீரோ யாராக இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் பெரிய ஹிட் அடிப்பார்கள் என்பது சென்ட்மென்ட். அந்த சென்ட்டிமென்ட்டுக்காகதான் இப்படி விட்டுக் கொடுக்கிறார் லிங்கு என்பவர்களும் இருக்கிறார்கள். டைரக்டர்கள் இருவரும் இப்படி கால்குலேஷன்களில் கிடந்து தவியாய் தவித்துக் கொண்டிருக்க, நடப்பது நடக்கட்டும் என்ற அலட்சிய மூடுக்கு வந்திருக்கிறார்கள் ஆர்யாவும் விஷாலும்.

என்ன செய்வது? ஹீரோக்களின் 'பரமபத' விளையாட்டுக்கு தாயம் உருட்டுறதே இந்த மாதிரி இயக்குனர்கள்தானே!


No comments:

Post a Comment