விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, February 2, 2011

    ரூ.4 ஆயிரம் திருடியதாக புகார்: நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை


    சென்னை பெசன்ட் நகர் ஆல்காட்குப்பத்தை சேர்ந்த கனகலிங்கம்-சாந்தி தம்பதியரின் மகள் திவ்யா (21). இவர் அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வந்தார்.  கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை திவ்யா வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி வைத்திருந்த 4 ஆயிரம் ரூபாய் காணாமல் போய் விட்டது. அந்த பணத்தை மாணவிகளுள் யாரோ ஒருவர் திருடி விட்டதாக புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து அந்த வகுப்பில் உள்ள எல்லா மாணவிகளிடமும் பேராசிரியைகள் சோதனை நடத்தினார்கள். ஆனால் யாரிடமும் பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மாணவி திவ்யா மீது பேராசிரியைகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    எனவே திவ்யாவை மட்டும் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.   திவ்யாவை ஆடைகளை கழற்ற சொல்லி பேராசிரியைகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த திவ்யா கண்ணீர் விட்டு அழுதார். மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பியதும் தாய் சாந்தியிடம் நடந்ததை பற்றி கூறினார். உடனே சாந்தி, இதுபற்றி கல்லூரிக்கு வந்து பேராசிரியைகளிடம் கேட்பதாக கூறினார்.

    ஆனால் திவ்யா அதை தடுத்து விட்டார். கல்லூரியில் இறுதியாண்டு படிப்பதால் மார்க்கை குறைத்து விடுவார்கள் என்று கூறி தாயை சமரசம் செய்து விட்டார்.   தாயை கல்லூரிக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்ட போதிலும் திவ்யாவின், மனதுக்குள் குமுறல் இருந்து கொண்டே இருந்தது.

    தன்மீது திருட்டுப்பட்டம் சுமத்தி அவமானப்படுத்தி விட்டார்களே என்று வேதனைபட்டபடி இருந்தார். இந்த நிலையில் திவ்யாவின் தந்தை கனகலிங்கம் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை சாந்தி அருகில் இருந்து கவனித்து வந்தார். நேற்று மாலை அவர் மருத்துவ மனைக்கு சென்றிருந்தார்.  திவ்யாவின் சகோதரர்கள் திவாகர், தினேஷ் ஆகியோரும் வெளியில் சென்றிருந்தனர். வீட்டில் தனிமையில் இருந்த மாணவி திவ்யா மனதில் மீண்டும் தன் மீதான திருட்டு பட்டம் புகார் எழுந்தது.

    அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  நேற்றிரவு 7 மணி அளவில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கனகலிங்கம் வீட்டில் ஏன் விளக்கு போடவில்லை? என்று வந்து பார்த்தனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பது தெரிந்தது. ஜன்னலை திறந்து பார்த்தபோதுதான் திவ்யா தூக்கில் பிணமாக தொங்குவது தெரிந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி சாந்திக்கு தகவல் கொடுத்தனர். அவர் அலறியடித்தப்படி ஓடி வந்தார். பிணமாக தொங்கிய மகள் உடலைப் பார்த்து கதறினார். இதற்கிடையே திவ்யா கடிதம் எழுதி வைத்து இருப்பதை உறவினர்கள் கண்டெடுத்தனர். அந்த கடிதத்தில் திவ்யா, நான் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். என் வகுப்பில் ரூ.4 ஆயிரம் காணாமல் போனதற்காக ஆசிரியர்கள் சோதனையிட்டனர். ஆனால் என்னை மட்டும்...... என்று எழுதி இருந்தார். இதை கண்டதும் உறவினர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இன்று (புதன்) காலை திவ்யாவின் உறவினர்கள் மற்றும் ஆல்காட் குப்பத்தை சேர்ந்த சுமார் 500 பேர் அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரி முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காலை 8.15 மணி முதல் 9.15 மணி வரை மறியல் நீடித்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கார்கள் கடற்கரை சாலை வரை நின்றது. போக்குவரத்து பாதிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர்கள் சாரங்கன், பெரியய்யா, உதவி கமிஷனர்கள் ஐசக்பால்ராஜ், நரசிம்மவர்மன் ஆகியோர் சென்று சமரச பேச்சு நடத்தினார்கள். மாணவி திவ்யாவை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதாக கூறப்படும் 3 பேராசிரியைகளிடம் விசாரணை நடப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதி கூறினார்கள்.

    இதையடுத்து ஆல்காட் குப்பம் மக்கள் கலைந்து சென்றனர். அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது. மாணவி திவ்யாவின் தாய்மாமா வீரமணி கூறுகையில், தேவையில்லாமல் திவ்யா மீது திருட்டு பட்டம் சுமத்தி விட்டனர். அவளை நிர்வாணப்படுத்தியதால் தற்கொலை செய்து விட்டாள். இனிமேல் எந்த ஒரு மாணவிக்கும் இத்தகைய முடிவு ஏற்படக் கூடாது என்றார்.

    மாணவி தற்கொலை பற்றி சாஸ்திரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 4 பேராசிரியைகளையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அடையாறு போலீஸ் நிலையத்தில் 4 பேரையும் வைத்து இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் 30-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் அடையாறு போலீஸ் நிலையத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். 4 பேராசிரியைகளை நாங்கள் பார்த்து கேள்வி கேட்க வேண்டும் என்றனர். உடனே துணை கமிஷனர் சாரங்கன் வந்து பேச்சு நடத்தினார்.

    மாணவி இறந்தது ஈடு செய்ய முடியாதது. இதில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார். அதற்கு பெண்கள் மறுத்து எங்களை கைது செய்யுங்கள் என்று கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மீனவ பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

    பெண்கள் போராட்டம் காரணமாக 4 பேரா சிரியைகளையும் போலீசார் பாதுகாப்பாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். வேன் முன்பும் பெண்கள் மறியல் செய்தனர். அவர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். இதேபோல் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையம் முன்பும் முற்றுகை நடந்தது. மதியம் வரை நடந்த முற்றுகை போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Posted by விழியே பேசு... at 3:02 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ▼  February (513)
      • காரைக் கவுத்திட்டீங்களேப்பா! -கவலைபடும் நடிகர்
      • ஒரு போதும் கமலுடன் இணைய மாட்டேன் : மிஸ்கின்
      • அமெரிக்காவில் மோசமான ஆலிவுட் படங்களுக்கு பிரீ ஆஸ்க...
      • பொன்னியின் செல்வனில் மகேஷ் பாபு அப்போ விஜய்...?
      • டைரக்டரை கதற வைத்த கார்த்தி!
      • தடை படுமா பகலவன்:பகலவன் தயாரிப்பில் புதிய குழப்பம்!
      • போகட்டும், நான் இருக்கேன்... மிஷ்கினுக்கு ஆர்யா சப...
      • அபலை பெண்களுக்கு உதவ “நைட் கிளப்” பாரில் நிதி திரட...
      • இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்
      • கற்பழிப்பு காட்சி! தூக்கம் கெட்டுப் போச்சி!! - சமீ...
      • "வெறும் நூர் இல்ல. கோகினூர்" -வாலி பாராட்டிய இசைய...
      • மத்திய பட்ஜெட் 2011 : முழு விபரம்
      • சூடு பிடிக்கும் தேர்தல்களம் நித்யானந்தா சந்தானம் ப...
      • தமிழுக்காக தெலுங்கை தவிர்த்தார்
      • 83வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு
      • இசையமைப்பாளர்கள் சங்க பொன்விழா: மார்ச் 5-ந் தேதி ப...
      • ஆஸ்கார் வாய்ப்பை இழந்தார் ஏ.ஆர்.ரகுமான்
      • மயங்கி விழுந்தார் சமீரா பிரபுதேவா ஷூட்டிங் கேன்சல்
      • இந்தியா இமாலய ரன் குவித்தும் போட்டியை சமன் செய்தது...
      • சினிசேவா விருது பெற்ற 'நர்த்தகி'
      • முதல் இடம்
      • கவர்ச்சி நடிகை மும்மைத்கானின் புதிய அவதாரம் ...!
      • வன்முறை, ஆபாசத்தைத் தூண்டும் 14 டிவி நிகழ்ச்சிகளைத...
      • கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை உதவிக்கு இழுக்கும் ந...
      • தீபிகா படுகோனே அசின் மோதல்
      • மலையாளத்தை புறக்கணிக்க மனமில்லை - சீடன் நாயகி அனன்யா
      • அர்ச்சகர் தேவநாதன் காட்சிக்கு சென்சார் தடை!
      • அமெரிக்காவில் 10 ஆம் தமிழ் இணைய மாநாடு ஆராய்ச்சி க...
      • நடுநிசி நாய்கள் கெளதம் மேனன் வீடு முற்றுகை
      • பிரிட்டிஷ் மாடலுடன் சல்மான் காதல்: ஆச்சரியத்தில் ப...
      • டிரஸ் மாறும் அமலா பால்
      • வித்யாபாலனிடம் உருகிய பிரபுதேவா டென்ஷனில் நயன்தாரா?
      • பொறி பறக்கும் காட்சிகளுடன் விஜய்யின் 'பகலவன்'
      • தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி எப்போது அறிவிக...
      • யாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்கள்? : பிரகாஷ்ர...
      • மங்காத்தாவில் அஜீத்தின் பஞ்ச் டயலாக்
      • மதுரைக்கு பயணம் செல்லும் 'பயணம்' குழுவினர்
      • அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசை -அமிதாப் பதில்
      • கிளிநொச்சியில் தமிழரின் 1500 ஏக்கர் நிலத்தை ஆக்கிர...
      • ஜெனிலியா போட்ட சண்டை!
      • தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! - பயணம் நாயகி
      • நடந்ததைதான் எடுத்திருக்கோம்...பயணம் பற்றி இயக்குனர்
      • மந்திரி தந்த குபேர வாழ்க்கையில் குட்டி ராதிகா
      • விஜய், விஷால் நேரடி மோதல்!
      • நாடோடிகள் அபிநயாவுக்கு என்ன ஆச்சு வருந்தும் திரையு...
      • எல்லாவரும் சின்னவீடு இருக்கும் போது பிரியங்காவுக்க...
      • சென்னையில் நடிகர்கள் விஜய், பிரேம்ஜி சென்ற கார் கவ...
      • குழந்தைப் பெற்றுக் கொண்டேனா..? - கொதிக்கும் த்ரிஷா
      • வானம் கதாநாயகி மாற்றம்
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : மங்காத்தாவில் அஞ்சல...
      • கெட்டுப்போன குளுக்கோஸ் ஏற்றியதால் 12 கர்ப்பிணி பெண...
      • உலக்கோப்பை கிரிக்கெட்டும் தமிழ் சினிமா உலகமும்
      • கிளம்பிட்டாங்கைய்யா .....கிளம்பிட்டாங்க
      • ரஜினிக்கு வில்லியாக காதல் மன்னன் மகள்!
      • சந்தர்ப்பவாத சாக்கடையில் குதித்த விஜயகாந்த்
      • ரஜினிக்கு கிடைத்த பாராட்டு
      • மீண்டும் சூடு பிடிக்கும் நித்யானந்தா பிரச்சனை 3 சீ...
      • நம்புங்கப்பா அடுத்தது காதல் படம்தான்! - கவுதம் மேனன்
      • “சிவ சிவா” படத்தில் “செக்ஸ்” விமர்சனம்
      • காதுக்கு வந்த கலவரம்... கவலைப்படுகிறார் ஓவியா
      • ஒரு வாரத்துக்குளே நீக்கல்லைன்னா கவுதம் மேனனுக்கு எ...
      • ரஜினியிடம் அடி வாங்குவதே பெருமைதான் -பிரபல நடிகர்
      • அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் ரசிகர்கள் தேர்தலில் ப...
      • 3 நாட்கள் படப்பிடிப்பிற்காக 6 மாதங்கள் காந்திருந்த...
      • குவியும் வாய்ப்புகளால் குஷியான புதுமுக ஹீரோ
      • எனக்கு பிடித்த நாட்கள்
      • திமுக மீது சோனியா கோபம் .....
      • டாப்ஸியை ‌தேடி வந்த பாலிவுட் வாய்ப்புகள்!
      • இந்திய அழகிகள் அணிவகுக்கும் 'பொன்னர் சங்கர்'!
      • நடுநிசி நாய்களுக்காக குரைக்கும் கவுதம் மேனன்!!
      • மாறுவேடத்தில் 5 நாள் ஜாலியாக இருந்த ராகுல்
      • மலேசியா வாசுதேவன் மறைவுக்கு ரகுமான் இரங்கல்
      • த்ரிஷாவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த அஜித்
      • ரஜினி சிலையும் ரஜினியின் சென்ட்டிமென்ட்டும்...
      • ரஜினி பாணியில் விஜய் தேர்தல் நேர வாய்ஸ்'
      • ஆர்யா, சூர்யா, ஜீவா படங்கள்... வெற்றிமாறன் காட்டுல...
      • ராணாவை மறுத்தது ஏன் உண்மையை போட்டு உடைக்கும் மாதுர...
      • கூட்டணி குறித்துக் கேட்டதால் விஜயகாந்த் கோபம்!
      • கின்னஸுக்கு செல்கிறது 'அவன் இவன்'?!
      • பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் உடல் அடக்கம் (ப...
      • ஆட்டோ சங்கர் 11(தொடர்)
      • கதை பஞ்சத்தில் தமிழ் சினிமா: தமிழில் `ரீமேக்' ஆகும...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :விஜய் தங்கையின் பிற...
      • பொதுமக்களை முகம் சுளிக்க வைத்த விஜய் ரசிகர்கள்!
      • டான் 2 vs பில்லா 2
      • வந்தே தீரும்... வருதா பார்க்குறேன்...சில்க் விஷயத்...
      • சென்சாரை வென்ற காந்தியும் பிரபாகரனும்!
      • 'அம்மாவே மகனுடன்...'-கவுதம் வீட்டில் விளக்குமாறுடன...
      • உலக கோப்பை கிரிகெட் நேரடி ஒளிப்பரப்பு
      • நாய்க்கு `சச்சின்' பெயரை வைத்த தென்ஆப்பிரிக்க பயிற...
      • நாசமாக்கப்பட்ட பார்வதியம்மாள் அஸ்தி... சிங்கள நாய்...
      • காங்கிரஸ் நிபந்தனையும் தி.மு.க. குழப்பமும் தொகுதி ...
      • விஜயின் பொன்னியின் செல்வன் புதிய தகவல்
      • மாற்றான் படத்தில் சூர்யாவின் ஜோடி
      • தயாரிப்பாளரை தேடிய இயக்குனர்
      • அஜீத் கடத்தல்காரன் ஆனது எப்படி?
      • லிபியா கலவரத்தில் தமிழர் பலி: மேலும் 29 பேரை பத்தி...
      • ஆட்டோ சங்கர் 10 (தொடர்)
      • நடிகை பிரியங்கா சோப்ராவுடன் ரசிகர் மோதல்
      • ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த மாதுரி தீட்சித்
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.