Saturday, February 26, 2011

சின்ன சின்ன சினிமா செய்திகள் : மங்காத்தாவில் அஞ்சலி ஜோடி ?



மங்காத்தாவில் அஞ்சலி ஜோடி ?
மங்காத்தாவில் அ‌‌‌ஜீத்துக்கு த்‌ரிஷா ஜோடி. லட்சுமிராயும் இருக்கிறார். அப்படியானால் அஞ்சலி? அவர் வைபவுக்கு ஜோடியாம். ஹோம்லி வேடத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்‌கிறோம் மாடர்ன் கேரக்டர் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தவருக்கு இந்த வருடம் மங்காத்தா மூலம் கிடைத்துள்ளது. மங்காத்தாவில் அஞ்சலிக்கு உண்மையிலேயே மாடர்ன் கேர்ள் கதாபாத்திரம்.


மீண்டும் டைரக்ஷன் களத்தில் ரேவதி! 
மித்ர மை ஃப்ரண்ட்படத்தை இயக்கிய ரேவதி, மீண்டும் டைரக்ஷன் களத்தில் குதிக்க தயாராகிவிட்டார். முழு ஸ்க்ரிப்ட்டையும் முடித்து விட்ட அவர், அந்தப் படத்தை இந்தியில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதே கதை. மேலும் படத்தில் பணிப்புரிய தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார் ரேவதி.


திருப்பதி பிரதர்ஸ் தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் 
பிரகாஷ்ராஜ் தயாரிப் பில், ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள பயணம்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப்படத்தை இயக்குநர் என்.லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தமிழ்நாடு முழுக்க ரிலீஸ் செய்துள்ளது. லிங்குசாமியின் தம்பியும் தயாரிப்பாளருமான என்.சுபாஷ் சந்திரபோஸ் தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் செய்து வருகிறார்.



No comments:

Post a Comment