Saturday, February 26, 2011

வானம் கதாநாயகி மாற்றம்


சிம்பு-அனுஷ்கா ஜோடியாக நடித்துவரும் "வானம்" படத்தில் இருந்து மற்றொரு நாயகியான சினேகா உல்லல் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டில்லியை சேர்ந்த ஜாஸ்மின் என்ற புதுமுகம் நடிக்கவுள்ளார்.

தெலுங்கில் அனுஷ்கா நடிப்பில், டைரக்டர் கிரிஷ் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் படமான "வேதம்" படத்தின் தமிழ் ரீமேக் தான் "வானம்". இதில் சிம்பு, அனுஷ்கா, பரத் ஆகியோர் நடிக்கின்றனர். தெலுங்கில் வேதம் படத்தை இயக்கிய டைரக்டர் கிரிஷே இப்படத்தை இயக்குகிறார். படத்தில் இன்னொரு நாயகியாக சினேகா உல்லல் நடிக்க ஒப்பந்தமானார். படவிழா துவக்கத்தின் போதும் அவர் பங்கேற்றார். படத்தின் சில காட்சிகளிலும் நடித்தார். இதுதவிர சிம்பு நடிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் வானம் படத்திலிருந்து சினேகா உல்லல் திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டில்லியை சேர்ந்த ஜாஸ்மின் என்பவர் நடிக்கிறார். படத்தில் ஜாஸ்மின் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. திடீரென சினேகா உல்லல் நீக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.



No comments:

Post a Comment