Tuesday, February 22, 2011

விஷால் தந்த பயிற்சி சமீரா ரெட்டி நெகிழ்ச்சி


பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கிவிட்டது. (பேரு வச்சிருந்தா சொல்ல மாட்டோமா?) விஷாலுடன் சமீரா ரெட்டி ஜோடியாக நடித்து வருகிறார்.

எப்போதோ துவங்கியிருக்க வேண்டிய இந்த படம் அவன் இவனால் தாமதமானது என்பதை பலரும் அறிவார்கள். ஒருவழியாக அப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஷால், சில வார ரெஸ்ட்டுக்கு பின் இப்படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் முதல் நாள் படப்பிடிப்பை நடத்தினார் பிரபுதேவா. கதைப்படி விஷால் ஜிம் மாஸ்டர். அங்கு வரும் சமீரா ரெட்டிக்கு கட்டுடல் பயிற்சி கொடுக்கிறார். இதற்காக கவர்ச்சியாக உடை அணிந்தபடி வந்திருந்தார் சமீரா. நாள் முழுக்க இருவரும் சைக்கிளை மிதித்துக் கொண்டும், உடம்பை முறுக்கிக் கொண்டும் இருந்தார்கள்.

'சிக்ஸ்பேக்' மட்டும் வேணவே வேணாஞ்சாமி...


No comments:

Post a Comment