Tuesday, February 22, 2011

விஜய் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார்: சாக்குபோக்கு சொல்லி புறமுதுகிட்டு ஓடினார்


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதை கண்டித்தும், அதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில்    நாகை வழிவலம் தேசிகர் பாலி டெக்னிக் அருகில் இன்று  மாலை 4 மணிக்கு  கண்டன ஆர்ப்பாட்டம் நடப்பதாக இருந்தது.

  கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து விஜய்யின் ரசிகர்கள்  பெருந்திரளாக வந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க  நடிகர் விஜய் வந்தார்.   அப்பொழுது கூட்டம் அதிகமாக இருந்தது. ரசிகர்களை கட்டுப்படுத்த போதிய அளவு போலீசார் இல்லாதால் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி சிறிது நேரம் கை அசைத்தார். பின்னர் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு  அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

குறிப்பு :உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் சிறிது நேரத்தில் நமது வலைத்தளத்தில் வெளிவரும்.....



No comments:

Post a Comment