Thursday, February 24, 2011

மலேசியா வாசுதேவன் மறைவுக்கு ரகுமான் இரங்கல்


பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவன் சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலமானார். தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்களுள் ஒருவர் மலேசியா வாசுதேவன். டெல்லி டு மெட்ராஸ்படத்துக்காக முதல் பாடல் பாடினார். ஆனால் அவரை வெளி உலகுக்கு அடையாளம் காட்டியது, ‘பதினாறு வயதினிலேபடத்தில் இடம்பெற்ற ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...பாடல். பிறகு, ‘கோடைகால காற்றே’, ‘அள்ளித் தந்த பூமி’, ‘தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி’, ‘பொன்மானைத் தேடி நானும்...’, ‘பூங்காத்து திரும்புமாஉட்பட இவர் பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவரது குரல் ரஜினிக்கு பொருத்தமாக இருந்ததால், அவர் படங்களில் அதிகமாக பாடி வந்தார். இந்நிலையில் மலேசியா வாசுதேவன் மறைவுக்கு ரகுமான் இரங்கல் தெரிவித்ததுடன், ‘என் மனதில் இடம்பெற்ற ஒரு சிலரில் மலேசியா வாசுதேவனும் ஒருவர்Õ என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.


No comments:

Post a Comment