Monday, February 28, 2011

அபலை பெண்களுக்கு உதவ “நைட் கிளப்” பாரில் நிதி திரட்ட தயாராகும் நடிகை


விஜய் ஜோடியாக வேலாயுதம் படத்தில் பிசியாக இருக்கிறார் ஜெனிலியா. போர்ஸ் என்ற இந்திப் படத்திலும் நடிக்கிறார். இரவு விருந்துகளில் பங்கேற்பது ஜெனிலியாவுக்கு பிடித்தமான விஷயம்.

தற்போது நைட் கிளப் பாரில் நடக்கும் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அபலை பெண்களுக்காக நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளார். இதுபற்றி ஜெனிலியா கூறுகிறார்.

ஆதரவற்ற பெண்களுக்கும், கஷ்டப்படுகிற பெண்களுக்கும் உதவி செய்கிற அமைப்பு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நைட் கிளப்பில் ஒரு நாள் முழுவதும் இருக்க முடிவு செய்துள்ளேன். அங்கு வருபவர்களை வரவேற்பேன், கலந்துரையாடவும் செய்வேன். இது போன்ற சமூக சேவை பணிகளில் எனக்கு ஈடுபாடு உண்டு.

கொடுமைகள், கஷ்டங்களை எதிர்த்து போராடும் பலம் பெண்களிடம் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு கல்வி அறிவு கொடுத்தால் அந்த பெண்ணின் குடும்பமே நன்றாக இருக்கும், அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.

இவ்வாறு ஜெனிலியா கூறினார்.

அது சரி மாமியார் கோபப்பட  மாட்டாங்களா....?

No comments:

Post a Comment