Monday, February 28, 2011

இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்


இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் சல்மான்கான் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடித்த படங்கள் ஒவ்வொரு ஏரியாவிலும் பல கோடிக்கு விலை போவதால் சல்மான்கான் கேட்ட சம்பளத்தை கொடுத்து புதுப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் போட்டி போடுகின்றனர்.

இதனால் சல்மான்கான் சம்பளத்தை உயர்த்தியுள்ளார். படத்தின் லாபத்திலும் பாதியை வாங்குகிறார். ரெடிபடத்துக்கு ரூ.17.5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தின் லாபத்திலும் பாதியை தரவேண்டும் என்று முன்கூட்டியே ஒப்பந்தம் போட்டாராம்.

மெகாஹிட் ஆன தபாங்இந்திப்படத்துக்கு பின் சல்மான்கானுக்கு ரூ.30 கோடி வரை சம்பளம் கொடுக்க பலர் முன் வந்தனர்.


No comments:

Post a Comment