விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, February 2, 2011

    தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது: இலவசத்தால் வந்த பலன்


    தமிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

    அரசின் கடன் 


    தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.மாநில அரசுகளின் மொத்த கடன் அளவு, அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தமிழக அரசு அதற்கு உட்பட்டே இருப்பதாக கூறிக் கொள்கிறது.ஆனால், தமிழக அரசுக்கு பல்வேறு விதங்களில் வரும் வரி வருவாயை, சமூக பாதுகாப்பு மற்றும் தொலைநோக்கு திட்டங்களுக்கு செலவிடாமல், இலவச திட்டங்களுக்கு செலவிடுவதாக, நிதித்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.


    அரசின் வருவாய் 


    மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலம் வருவாய், 7,508 கோடி ரூபாய், பெட்ரோல் விற்பனை வரி மூலம், 6,000 கோடி ரூபாய் உள்பட வணிகவரி வசூல், 26 ஆயிரத்து 851 கோடி ரூபாய், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 4,096 கோடி ரூபாய், மோட்டார் வாகன வரிகள் மூலம், 2,400 கோடி ரூபாய் என, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 41 ஆயிரத்து 438 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதுதவிர, வரி அல்லாத வருவாய் 4,101 கோடியாகும். மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும்.

    இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய்.மாநில அரசின் வரி வருவாயில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக 78 சதவீதம் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயில், 51 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது. எனினும், வருவாயை பொறுத்தவரை அனைத்து வகையிலும் ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

    இலக்கினை எட்ட முடியாத நிலை 


    இவ்வாறு வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி - சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், "டிவி' என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

    இதன் காரணமாகவே, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்பட பெரும்பாலான திட்டங்களை கடன் பெற்றே அரசு செலவிடுகிறது. இதனால், கடன் சுமை மற்றும் நிதிச்சுமை அரசுக்கு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. திருப்பிச் செலுத்தும் அளவும் குறைந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க, மேலும், மேலும் கடன் பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு உள்ளாகவே நிதிப் பற்றாக்குறை இருக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

    இந்நிலையில், கடந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சி காரணமாக, நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதம் வரை வைத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அனுமதித்ததால், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, 3.72 சதவீதமாக உயர்ந்தது.தமிழக அரசின் மாநில திட்டக்குழு வகுத்துள்ள, 11வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம், வரும் நிதியாண்டுடன் முடிகிறது. இந்த காலத்துக்குள் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த இலக்கை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

    மாநிலத்தின் ஐந்தாண்டு திட்டக் காலத்துக்குள், ஆண்டுக்கு 9 சதவீத, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெறுதல், வேளாண்மையிலும் அதன் துணை நடவடிக்கைகளிலும் ஆண்டுக்கு குறைந்தளவு, 4 சதவீத வளர்ச்சி பெறுதல், தொழில்துறையில் ஆண்டுக்கு, 9.2 சதவீத வளர்ச்சி பெறுதல், பணித் துறையில் ஆண்டுக்கு 10.1 சதவீத வளர்ச்சி பெறுதல், 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.இந்த இலக்குகள் ஐந்தாண்டு திட்டத்தின் நான்காவது ஆண்டான இந்த நிதியாண்டு வரை எட்டப்படவில்லை.


    அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன ஆச்சு?
    கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் துவக்கப்படவே இல்லை. பல திட்டங்கள் ஆரம்ப நிலையில் உள்ளன.தமிழக அரசு, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, கடந்த மார்ச் 19ம் தேதி தாக்கல் செய்தது. இதில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாமல் உள்ள முக்கிய திட்டங்கள் வருமாறு:
    * நவீன முறையில் தூய்மையாகவும், துரிதமாகவும் பாலை பதப்படுத்தவும், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்யவும், கோவை ஆவின் நிறுவனம், 27 கோடி ரூபாயில், தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் உதவியோடு நவீனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதற்கான பணிகள் துவக்கப்படவில்லை.
    *
    தஞ்சை, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் பயனடையும் வகையில், கொள்ளிடம் வெள்ளத் தடுப்புத் திட்டம், 376 கோடியிலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், வெள்ளாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 164 கோடியிலும், கடலூர் மாவட்டத்தில் பெண்ணையாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 69 கோடி ரூபாயிலும் என, மொத்தம், 609 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதே போன்ற அறிவிப்பு, இந்த ஆண்டு கவர்னர் உரையிலும் இடம்பெற்றுள்ளது. பணிகள் துவக்கப்படவில்லை.
    *
    இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வீடுகள் கட்டிக் கொடுக்கவும், 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
    *
    மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிளில் படிக்கும், 10 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவசமாக, "ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி', வரும் கல்வியாண்டில் இருந்து ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்து. ஆனால், இதுவரை ஒரு மாணவருக்கு கூட வழங்கவில்லை.
    *
    மத்திய அரசின் நிதி உதவியுடன் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் துவக்கப்படும். மத்திய அரசு நிதி உதவியுடன், ஏழு புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு பாலிடெக்னிக் கூட புதிதாக துவக்கப்படவில்லை.
    *
    திருவண்ணாமலையில், ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை இதற்கான கட்டுமானப் பணிகளை துவக்கவில்லை.
    *
    வரும் நிதியாண்டில், தமிழக மின்வாரியம், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சி திட்டங்கள் மூலம், 1,400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கூடுதலாக நிறுவப்படும் என வழக்கம் போல அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிதாக மின் உற்பத்தித் திட்டங்கள் ஏதும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
    *
    வேலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப் பகுதிகளுக்கு, குடிநீர் வழங்கும் திட்டம், 1,800 கோடி ரூபாயில், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டியதோடு சரி. பணிகள் துவக்கப்படவில்லை.
    *
    யானைக்கால் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கால், கை போன்றவற்றை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத உதவித் தொகையாக, 400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கும் பணி ஏதும் துவக்கப்படவில்லை.இதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.


    Posted by விழியே பேசு... at 9:17 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ▼  February (513)
      • காரைக் கவுத்திட்டீங்களேப்பா! -கவலைபடும் நடிகர்
      • ஒரு போதும் கமலுடன் இணைய மாட்டேன் : மிஸ்கின்
      • அமெரிக்காவில் மோசமான ஆலிவுட் படங்களுக்கு பிரீ ஆஸ்க...
      • பொன்னியின் செல்வனில் மகேஷ் பாபு அப்போ விஜய்...?
      • டைரக்டரை கதற வைத்த கார்த்தி!
      • தடை படுமா பகலவன்:பகலவன் தயாரிப்பில் புதிய குழப்பம்!
      • போகட்டும், நான் இருக்கேன்... மிஷ்கினுக்கு ஆர்யா சப...
      • அபலை பெண்களுக்கு உதவ “நைட் கிளப்” பாரில் நிதி திரட...
      • இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்
      • கற்பழிப்பு காட்சி! தூக்கம் கெட்டுப் போச்சி!! - சமீ...
      • "வெறும் நூர் இல்ல. கோகினூர்" -வாலி பாராட்டிய இசைய...
      • மத்திய பட்ஜெட் 2011 : முழு விபரம்
      • சூடு பிடிக்கும் தேர்தல்களம் நித்யானந்தா சந்தானம் ப...
      • தமிழுக்காக தெலுங்கை தவிர்த்தார்
      • 83வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு
      • இசையமைப்பாளர்கள் சங்க பொன்விழா: மார்ச் 5-ந் தேதி ப...
      • ஆஸ்கார் வாய்ப்பை இழந்தார் ஏ.ஆர்.ரகுமான்
      • மயங்கி விழுந்தார் சமீரா பிரபுதேவா ஷூட்டிங் கேன்சல்
      • இந்தியா இமாலய ரன் குவித்தும் போட்டியை சமன் செய்தது...
      • சினிசேவா விருது பெற்ற 'நர்த்தகி'
      • முதல் இடம்
      • கவர்ச்சி நடிகை மும்மைத்கானின் புதிய அவதாரம் ...!
      • வன்முறை, ஆபாசத்தைத் தூண்டும் 14 டிவி நிகழ்ச்சிகளைத...
      • கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை உதவிக்கு இழுக்கும் ந...
      • தீபிகா படுகோனே அசின் மோதல்
      • மலையாளத்தை புறக்கணிக்க மனமில்லை - சீடன் நாயகி அனன்யா
      • அர்ச்சகர் தேவநாதன் காட்சிக்கு சென்சார் தடை!
      • அமெரிக்காவில் 10 ஆம் தமிழ் இணைய மாநாடு ஆராய்ச்சி க...
      • நடுநிசி நாய்கள் கெளதம் மேனன் வீடு முற்றுகை
      • பிரிட்டிஷ் மாடலுடன் சல்மான் காதல்: ஆச்சரியத்தில் ப...
      • டிரஸ் மாறும் அமலா பால்
      • வித்யாபாலனிடம் உருகிய பிரபுதேவா டென்ஷனில் நயன்தாரா?
      • பொறி பறக்கும் காட்சிகளுடன் விஜய்யின் 'பகலவன்'
      • தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி எப்போது அறிவிக...
      • யாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்கள்? : பிரகாஷ்ர...
      • மங்காத்தாவில் அஜீத்தின் பஞ்ச் டயலாக்
      • மதுரைக்கு பயணம் செல்லும் 'பயணம்' குழுவினர்
      • அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசை -அமிதாப் பதில்
      • கிளிநொச்சியில் தமிழரின் 1500 ஏக்கர் நிலத்தை ஆக்கிர...
      • ஜெனிலியா போட்ட சண்டை!
      • தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! - பயணம் நாயகி
      • நடந்ததைதான் எடுத்திருக்கோம்...பயணம் பற்றி இயக்குனர்
      • மந்திரி தந்த குபேர வாழ்க்கையில் குட்டி ராதிகா
      • விஜய், விஷால் நேரடி மோதல்!
      • நாடோடிகள் அபிநயாவுக்கு என்ன ஆச்சு வருந்தும் திரையு...
      • எல்லாவரும் சின்னவீடு இருக்கும் போது பிரியங்காவுக்க...
      • சென்னையில் நடிகர்கள் விஜய், பிரேம்ஜி சென்ற கார் கவ...
      • குழந்தைப் பெற்றுக் கொண்டேனா..? - கொதிக்கும் த்ரிஷா
      • வானம் கதாநாயகி மாற்றம்
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : மங்காத்தாவில் அஞ்சல...
      • கெட்டுப்போன குளுக்கோஸ் ஏற்றியதால் 12 கர்ப்பிணி பெண...
      • உலக்கோப்பை கிரிக்கெட்டும் தமிழ் சினிமா உலகமும்
      • கிளம்பிட்டாங்கைய்யா .....கிளம்பிட்டாங்க
      • ரஜினிக்கு வில்லியாக காதல் மன்னன் மகள்!
      • சந்தர்ப்பவாத சாக்கடையில் குதித்த விஜயகாந்த்
      • ரஜினிக்கு கிடைத்த பாராட்டு
      • மீண்டும் சூடு பிடிக்கும் நித்யானந்தா பிரச்சனை 3 சீ...
      • நம்புங்கப்பா அடுத்தது காதல் படம்தான்! - கவுதம் மேனன்
      • “சிவ சிவா” படத்தில் “செக்ஸ்” விமர்சனம்
      • காதுக்கு வந்த கலவரம்... கவலைப்படுகிறார் ஓவியா
      • ஒரு வாரத்துக்குளே நீக்கல்லைன்னா கவுதம் மேனனுக்கு எ...
      • ரஜினியிடம் அடி வாங்குவதே பெருமைதான் -பிரபல நடிகர்
      • அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் ரசிகர்கள் தேர்தலில் ப...
      • 3 நாட்கள் படப்பிடிப்பிற்காக 6 மாதங்கள் காந்திருந்த...
      • குவியும் வாய்ப்புகளால் குஷியான புதுமுக ஹீரோ
      • எனக்கு பிடித்த நாட்கள்
      • திமுக மீது சோனியா கோபம் .....
      • டாப்ஸியை ‌தேடி வந்த பாலிவுட் வாய்ப்புகள்!
      • இந்திய அழகிகள் அணிவகுக்கும் 'பொன்னர் சங்கர்'!
      • நடுநிசி நாய்களுக்காக குரைக்கும் கவுதம் மேனன்!!
      • மாறுவேடத்தில் 5 நாள் ஜாலியாக இருந்த ராகுல்
      • மலேசியா வாசுதேவன் மறைவுக்கு ரகுமான் இரங்கல்
      • த்ரிஷாவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த அஜித்
      • ரஜினி சிலையும் ரஜினியின் சென்ட்டிமென்ட்டும்...
      • ரஜினி பாணியில் விஜய் தேர்தல் நேர வாய்ஸ்'
      • ஆர்யா, சூர்யா, ஜீவா படங்கள்... வெற்றிமாறன் காட்டுல...
      • ராணாவை மறுத்தது ஏன் உண்மையை போட்டு உடைக்கும் மாதுர...
      • கூட்டணி குறித்துக் கேட்டதால் விஜயகாந்த் கோபம்!
      • கின்னஸுக்கு செல்கிறது 'அவன் இவன்'?!
      • பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் உடல் அடக்கம் (ப...
      • ஆட்டோ சங்கர் 11(தொடர்)
      • கதை பஞ்சத்தில் தமிழ் சினிமா: தமிழில் `ரீமேக்' ஆகும...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :விஜய் தங்கையின் பிற...
      • பொதுமக்களை முகம் சுளிக்க வைத்த விஜய் ரசிகர்கள்!
      • டான் 2 vs பில்லா 2
      • வந்தே தீரும்... வருதா பார்க்குறேன்...சில்க் விஷயத்...
      • சென்சாரை வென்ற காந்தியும் பிரபாகரனும்!
      • 'அம்மாவே மகனுடன்...'-கவுதம் வீட்டில் விளக்குமாறுடன...
      • உலக கோப்பை கிரிகெட் நேரடி ஒளிப்பரப்பு
      • நாய்க்கு `சச்சின்' பெயரை வைத்த தென்ஆப்பிரிக்க பயிற...
      • நாசமாக்கப்பட்ட பார்வதியம்மாள் அஸ்தி... சிங்கள நாய்...
      • காங்கிரஸ் நிபந்தனையும் தி.மு.க. குழப்பமும் தொகுதி ...
      • விஜயின் பொன்னியின் செல்வன் புதிய தகவல்
      • மாற்றான் படத்தில் சூர்யாவின் ஜோடி
      • தயாரிப்பாளரை தேடிய இயக்குனர்
      • அஜீத் கடத்தல்காரன் ஆனது எப்படி?
      • லிபியா கலவரத்தில் தமிழர் பலி: மேலும் 29 பேரை பத்தி...
      • ஆட்டோ சங்கர் 10 (தொடர்)
      • நடிகை பிரியங்கா சோப்ராவுடன் ரசிகர் மோதல்
      • ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த மாதுரி தீட்சித்
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.