இதுநாள்வரை ரொமான்ஸ் ஹீரோவாக காதல் மட்டும் செய்து கொண்டிருந்த பிருத்விராஜ், முதன்முறையாக ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் அன்வர்.
பிருத்விராஜூடன் பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், லால் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் மலையாள மொழியில் உருவாகி கேரளாவில் சக்கைபோடுபோட்டு விட்டு தமிழகத்தில் தமிழ்பேச இருக்கிறது. அடுத்து தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீ-மேக் ஆக இருக்கிறது.
பயங்கரவாதம் பற்றிய படம் என்பதால் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அன்வர் படத்தை ராம்கோபால் வர்மாவின் இணை இயக்குநர் அமல் நீரத் இயக்கி இருக்கிறார். ரெட்கார்ப்பெட் எனும் புதிய பட நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. மார்ச்-11ல் தமிழகமெங்கும் பரபரப்பை கிளப்ப இருக்கிறானாம் அன்வர்!

No comments:
Post a Comment