விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, March 10, 2011

    அதிமுக கூட்டணி உடைகிறது?: 3வது அணி அமைக்க வைகோ முயற்சி?

    தங்களை அதிமுக பொதுச் செயலாளர் ஊறுகாயாக பயன்படுத்துவதாக மதிமுக, இடதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.

    இவர்களுக்கு மிகக் மிகக் குறைவான தொகுதிகளையே தர அதிமுக முன் வந்துள்ளது. இது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.

    ஆனால், அதைவிட அவர்களை மிக மிக கோபம் கொள்ள வைத்தது ஜெயலலிதாவின் சந்தர்ப்பாதம் தான் என்கிறார்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே சண்டை வந்தவுடன், காங்கிரஸை கூட்டணியில் சேர்ப்பதற்காக தங்களுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையையே ஜெயலலிதா நிறுத்தி வைத்ததை வைகோவும் இடதுசாரிகளும் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கேவலமாகக் கருதுகின்றனர்.

    ஜெயலலிதாவின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளரின் சொல்படி, இவர்களை வெட்டிவிட்டுவிட்டு காங்கிரசோடு கூட்டணி சேர அதிமுக முடிவு செய்து டெல்லியில் தனது சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆ'சாமி'யின் உதவியோடு அந்தக் கூட்டணிக்காக அதிமுக தீவிரமாக முயன்றது.

    இதை உணர்ந்த மதிமுகவினரும், இடதுசாரிகளும் கடும் கோபத்துக்குள்ளாகினர். ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உறுதியானதும், இவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது அதிமுக. இதை இவர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள்.

    அதிமுக செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தங்களுக்கு மரியாதையான அளவிலான தொகுதிகளையாவது ஒதுக்கித் தர வேண்டும் என்பது தான் வைகோ மற்றும் இடதுசாரிகளின் இப்போதைய கருத்தாக உள்ளது.

    ஆனால், தேமுதிக வந்துவிட்ட தைரியத்தில் இவர்களை உதாசீனப்படுத்தும் வகையில் ஜெயலலிதா நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார். இதற்கு அவரது அட்வைசரான அந்த பத்திரிக்கையாளரே முக்கியமானதாகக் கருதப்படுகிறார். ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட அவருக்கு வைகோவைக் கண்டாலும் ஆகாது, இடதுசாரிகளை ஆகவே ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது பேச்சைக் கேட்டுக் கொண்டு தான் மதிமுகவுக்கு சிங்கிள் டிஜிட்டில் சீட் தருவதாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது அதிமுக. கடந்த முறை 35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக இம்முறை 36 கேட்டது. பின்னர் 30, 26 என்று இறங்கி வந்தார் வைகோ.

    ஆனால், அதிமுகவோ மதிமுகவுக்கு 5 சீட்டில் ஆரம்பித்து 6, 7, 8, 9 என்று போய் இப்போது 10 சீட்களிலேயே நின்று கொண்டுள்ளது. இதையடுத்து 18 தந்தால் உடன்பாடு செய்து கொள்ளலாம் என்ற அளவுக்கு வைகோ இப்போது இறங்கி வந்துவிட்டார். ஆனாலும் இதைக் கூடத் தர அதிமுக தயாராக இல்லாததால் தான் அவரை அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இழுத்தடித்து வருகிறது என்கிறார்கள்.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் 35ல் போட்டியிட்டு 6ல் தானே வென்றீர்கள். அதிலும் 3 எம்எல்ஏக்கள் உங்களுடன் இல்லையே, மக்களவைத் தேர்தலில் 4 சீட் தந்து ஒரு
    இடத்தில் தான் வென்றீர்கள், இதனால் இப்போது 10 தொகுதிகள் போதாதா என்று மதிமுகவிடம் அதிமுக கேள்வி எழுப்பியதாகவும் சொல்கிறார்கள். இதையடுத்து 184 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வெறும் 61 தொகுதிகளில்தானே வென்றது. இதற்காக அதிமுக 50 மட்டும் போட்டியிடுமா என்று மதிமுக தரப்பு பதில் கேள்வி கேட்டுள்ளது.

    அதிமுகவின் இந்த செயல்களால் மனம் ஒடிந்து போன வைகோ, இப்போது தனது கட்சியின் மரியாதையைக் காப்பாற்ற போராடிக் கொண்டுள்ளார்.

    முதலில் கடந்த 5ம் தேதி இரவு 10 மணிக்கு தாயகத்தில் வைகோ தலைமையில் நடந்த மதிமுக அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் அனல் பறந்துள்ளது.

    கூட்டத்தில் பேசிய மதிமுக தொகுதி உடன்பாட்டுக் குழு உறுப்பினரான திருப்பூர் துரைசாமி, போயஸ் கார்டன் கதவை எத்தனையோ தடவை தட்டி விட்டோம். நம்மை ஒரு பொருட்டாகவே ஜெயலலிதா மதிக்கவில்லை. காங்கிரசோடு கூட்டு சேர சுப்பிரமணிய சாமி மூலம் ஜெயலலிதா முயற்சித்தார். இதனால் தான் ஸ்பெகட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சிப்பதை சாமி நிறுத்தினார். ஜெயலலிதா ஒரு நம்பிக்கைத் துரோகி என்று பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மதிமுக பொருளாளர் மாசிலாமணி பேசுகையில், நமக்கு மரியாதைக்குரிய அளவில் சீட் தரப்படாவிட்டால் அதிமுக கூட்டணியிலிருந்து நாம் வெளியேற வேண்டும் பேச, அடுத்தடுத்துப் பேசியவர்கள் ஜெயலலிதாவை மிகக் கடுமையான அர்ச்சித்துள்ளனர்.

    இறுதியில் கலங்கிய முகத்துடன் பேசிய வைகோ, நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஜெயலலிதா துரோகிதான். துரோகச்செயல்களுக்கு அஞ்சாதவர் தான். கம்யூனிஸ்டுகள் வெளியே வந்தால் அவர்களோடு சேர்ந்து மூன்றாவது அணியை அமைக்க முயல்வோம் என்று பேசியுள்ளார்.

    இந்தத் தகவல் அதிமுக தரப்புக்குக் கிடைக்க, நள்ளிரவில் மதிமுக அலுவலகத்துக்கு வந்த அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், அவசரப்பட வேண்டாம், கம்யூனிஸ்டுகளுக்கும், உங்களுக்கும் உரிய இடங்கள் தரப்படும் என்று சமாதானம் சொன்னதோடு சரத்குமார், கார்த்திக் கட்சிகளுக்கும் அம்மா சீட் தரப் போகிறார் என்று சொல்லிவிட்டுச் சென்றார் என்கிறார்கள்.

    ஆனாலும் அதைத் தொடர்ந்து 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதிமுகவிடமிருந்து எந்த அழைப்பும் இல்லாததால் அந்தக் கூட்டணியிலிருந்து கழன்றுவிட வைகோ திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாத நிலையில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து தனியாக 3வது அணியை உருவாக்க வைகோ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    மதிமுக, சிபிஎம், சிபிஐ ஆகிய மூன்று கட்சிகளையும் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பேச்சுவார்த்தைக்கு அழைத்து தொகுதிகளின் எண்ணிக்கையை ஜெயலலிதா அறிவிப்பார் என்று இந்தக் கட்சிகள் கருதின.

    ஆனால், இதில் எந்தக் கட்சியுடனும் ஜெயலலிதா இதுவரை தொகுதி உடன்பாடு செய்யவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் கடந்த திங்கள்கிழமை அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினர் ஒரு ஹோட்டலுக்கு அழைத்து டீ, வடை தந்து அனுப்பிவிட்டனர்.

    அப்போது மார்க்சிஸ்டுகளுக்கு அதிகபட்சம் 11 தான் என்று அதிமுக கூறியதால் பேச்சில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

    அட்லீஸ்ட் இவர்களை அதிமுக அழைத்தாவது பேசியது. ஆனால், சசிகலா மூலம் அதிமுகவுக்கு மிக நெருக்கமாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை இன்னும் அடுத்த சுற்று பேசக் கூட அதிமுக அழைக்கவில்லை. சசிகலாவின் பேச்சு இம்முறை போயஸ் கார்டனில் எடுபடவில்லை என்றும், ஜெயலலிதாவை அவரது சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் தான் வழிநடத்து வருகின்றனர் என்பதும் தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இதில் ஒருவரான அந்த பத்திரிக்கையாளர் தான் படாதபாடுபட்டு தேமுதிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 சீட் தான் என்று அதிமுக தேர்தல் குழுவினர் முன்பு கூறியிருந்தனர். இப்போதும் அதே எண்ணிக்கையில் தான் அதிமுக நிற்கிறது என்கிறார்கள்.

    இதனால் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு மதிமுக,
    இடதுசாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி தனியாக களத்தை சந்திக்கலாம் என்பதே இந்தக் கட்சிகளின் பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. ஆனால், தா.பாண்டியன் மட்டும் பொறுத்திருக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

    தனியாகக் களமிறங்கி ஓட்டுக்களைப் பிரித்து தங்களை கேவலப்படுத்தும் அதிமுகவை திமுக கூட்டணியிடம் தோற்கச் செய்வதே சரியான பதிலடியாக இருக்கும் என்று இவர்கள் கருதுகின்றனர்.

    அதிமுகவுக்கு பாடம் புகட்டுவதே சரி என்று மதிமுக, இடதுசாரிக் கட்சிகளுக்கு காவிரி டெல்டா
    இந் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி மதிமுக-இடதுசாரிகள் தனியாக மூன்றாவது அணி அமைக்க மாட்டார்களா என்ற நப்பாசையுடன் திமுகவும் எதிர் முகாமை பார்த்துக் கொண்டு
    காத்துக் கொண்டுள்ளது. அப்படி ஒன்று நடந்தால் அது தங்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தரும் என்பது திமுகவின் கணக்கு.

    இதனால் அந்தக் கூட்டணியை உடைக்க நாம் ஏதாவது செய்ய முடியுமா என்ற வியூகங்களையும் யோசித்துக் கொண்டுள்ளது திமுக.

    தேமுதிக, பிற கட்சிகளுக்கு 49 இடங்கள் தந்துவிட்ட நிலையில் மீதமிருக்கும் 185 இடங்களில் மதிமுக, சிபிஎம், சிபிஐக்கு மொத்தமாக 30 இடங்களை மட்டும் ஒதுக்கிவிட்டு, கார்த்திக், சரத்குமார் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளைத் தந்துவிட்டு மீதியுள்ள 153 இடங்களில் (கூட்டுத் தொகை ஜெயலலிதாவுக்கு உகந்த 9) போட்டியிட அதிமுக திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

    இதை மதிமுக-இடதுசாரிகள் ஏற்காவிட்டால் கூட்டணி உடைவதை தவிர்க்க முடியாது என்கிறார்கள்.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு திமுக 27 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் கடைசி நேரத்தில் 35 இடங்கள் தந்த அதிமுக கூட்டணிக்கு வைகோ இடம் மாறியது குறிப்பிடத்தக்கது. இம்முறை அவர் திமுக கூட்டணிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதால்,
    இடதுசாரிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைப்பது ஒன்றே அவருக்குரிய ஒரே வழியாகும.

    அடுத்த இரு நாட்களி்ல் தங்களுடன் உரிய தொகுதிப் பங்கீட்டை அதிமுக முடிக்காவிட்டால் மதிமுகவும் இடதுசாரிகளும் இது தொடர்பாக வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று தெரிகிறது.

    அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதிமுக 153க்குப் பதிலாக 144 தொகுதிகளை (மீண்டும் கூட்டுத் தொகை 9) எடுத்துக் கொண்டு மிச்சமுள்ள 9 தொகுதிகளை மூவருக்கும் பகிர்ந்து கொடுத்து கூட்டணியை காப்பாற்றும் முயற்சிகளில் இறங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இன்றைய பதிவுகள்...

    • கமலின் புதிய படம் பற்றிய புதிய தகவல்கள்
    • எதிர்பார்ப்பை தக்க வைக்கும் அஜீத்
    • எதிர்பார்த்த மாதிரி விஜய் இல்லை
    • ஏழாம் அறிவு பற்றிய பிரமிக்க வைக்கும் புதிய தகவல்
    • அதிமுக-சிபிஐ தொகுதி பங்கீட்டில் சிக்கல்
    • 'ஆடி' வாங்கிய கமல்!
    • கமிஷனரிடம் ஜீவா புகார்
    • அஜித்தின் மங்காத்தாவில் பின்லேடன்


    Posted by விழியே பேசு... at 10:55 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ▼  March (766)
      • சினிமாவில் கசப்பான அனுபவம் : தமன்னா பேட்டி
      • ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட திமுக கூட்டணியை வைகோ ஆ...
      • ஜெயலலிதாவின் தண்டனை காலம் முடிந்துவுட்டது: நடிகை ...
      • மொஹாலி போட்டி:நெஞ்சுவலியால் உயிரிழந்த நடிகர்
      • விஜயகாந்த்தை அவரது கூட்டணியே நம்பவில்லை: திருமா
      • சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு
      • ஆர்யாவிடம் துக்கம் விசாரிக்கும் ரசிகர்கள்
      • முட்டையால் அடித்தவர்களுக்கு வாக்குசேகரிப்பா? குஷ்...
      • வரும்... ஆனால் வராது - வடிவேலு
      • ரிஷிவந்தியம் காங்கிரஸ் வேட்பாளர் மீது சென்னை பெண் ...
      • ஜெ. - நடிகர் சிங்கமுத்து சந்திப்பு : வடிவேலுவுக்க...
      • ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்...
      • அதிமுக கொடிகளை அகற்ற சொன்ன விஜயகாந்த்துக்கு கடும் ...
      • வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்...
      • விஜயகாந்துடன் போகும் வேட்பாளர்கள் ஹெல்மெட் போட்டுக...
      • தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு வாக்குகள் இல்லாத நிலைய...
      • தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறாது: ராமதாஸ்
      • விஜயகாந்த் வண்டவாளம் எனக்கு தெரியும்: நெப்போலியன்
      • விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் 10 வேட்பாளர்கள்
      • கலைஞருடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; கலைஞர் சந்...
      • ஜெயலலிதாவுடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; ஜெ. சந...
      • சட்டப்படி குற்றம் :திரை விமர்சனம் :
      • மார்க்கெட் போன முன்னாள் கதாநாயகன்: ஸ்டாலின்
      • மதிமுக வெளியேறியது குறித்து மா.கம்யூ கருத்து
      • தலைவர் ஆவாரா தல?
      • விஜயுடன் பணிபுரிவது புது அனுபவம் : ஷங்கர்
      • விஜயகாந்த்தை வருங்கால முதல்-அமைச்சர் என்று அழைக்க ...
      • காமெடி பீஸ் வடிவேலு : நடிகை விந்தியா கலாய்ப்பு
      • ஓட்டு வேட்டை தொடங்கியது வீடு வீடாக, சரக்குடன் பிரி...
      • இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்...
      • பாகிஸ்தானை வீழ்த்தி பைனலில் அசத்தலாக நுழைந்தது இந்...
      • உங்க செல்லம்மா வந்திருக்கேன், ஓட்டுபோடுங்க: சென்டி...
      • காங்கிரஸ் வெற்றி பெற்றால்..... சீமான் பேச்சு
      • போதை பொருள் கடத்தலில் தொடர்பா?-திரிஷா ஆவேசம் ;திரை...
      • புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சொல்வார்... பிரேமலதா பே...
      • விஜயகாந்தின் உச்சகட்ட நாடகம் :வயிற்றில் அடித்துக்க...
      • வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் த...
      • காடுவெட்டி குரு சொன்னதை நானும் சொன்னால் அமைதியாக த...
      • கேப்டன் தாக்குவது சித்தரிக்கப்பட்ட காட்சி: அடிப்பட...
      • சேலத்தை தொடர்ந்து திருவிடைமருதூர்: விஜய் மக்கள் இய...
      • தமிழ்நாட்டின் மீது காங்கிரசுக்கு அக்கறை கிடையாது;வ...
      • வேட்பாளரை அடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை! - சோ
      • என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்! - சொ...
      • கனிமொழி மீதும் பாய்கிறது குற்றப்பத்திரிக்கை?
      • 'விஜய் எஸ்கேப்'-பிரசாரத்தில் ஈடுபட மாட்டார்: எஸ்.ஏ.சி
      • கருப்பு எம்ஜிஆருக்கு பில்டிங் ஸ்டார்ங். ஆனால் பேஸ்...
      • விக்ரமுக்கு 'நோ' விஜய்க்கு 'எஸ்'.. ரஜினிக்கு..?
      • விஜயகாந்த் விவகாரம்: அதிமுகவினர் - பாமகவினர் மோதல்
      • அ.தி.மு.க.வை விஜயகாந்த் கைப்பற்ற ரகசிய திட்டம் -வ...
      • ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு
      • வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து, உதைத்த ...
      • வருமான வரி சோதனை; அனுஷ்காவை சிக்க வைத்த தெலுங்கு ந...
      • ராமநாதபுரத்தில் ரகளை: திமுக எம்.பி. நடிகர் ரித்தீஷ...
      • கூட்டணி ஆட்சியா? அரசியல் வாரிசு யார்? குடும்ப அரசி...
      • கவர்ச்சி 'மகாராணி'!
      • இல.கணேசன் பிரச்சார கூட்டத்தில் முட்டை வீச்சு
      • கலைஞர் டிவிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாத...
      • டிஜிட்டலுக்கு மாறுங்க! -கமல்
      • சேலத்தில் விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு வீடியோ !!
      • சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன்... அரசியலில் நம்பர...
      • அனுதாப ஓட்டு : திருவாரூரில் ஜெ. தாக்கு
      • கை சின்னத்தை கை விடுங்கள் : சீமான்
      • அஜீத் ஆதரவு யாருக்கு?
      • கார்டுகளை எரித்தவர்கள் விபரம் அறியாத சிறியவர்கள்; ...
      • தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கரு...
      • பதினெட்டு வயசு கெட்டப்பில் விக்ரம்!
      • என்றும் தோற்காத இந்தியா-வெல்லத் துடிக்கும் பாக்!
      • சூர்யா-ஜோதிகா புது முடிவு
      • தங்கபாலு பதவி விலக கோரி சத்தியமூர்த்தி பவனில் காங்...
      • ஜாதி ரத்தம் குடிக்கும் ஓநாய் ராமதாஸ்-விஜயகாந்த் கட...
      • விஜயகாந்த் பிரச்சாரத்தை ஏற்பார்களா? கனிமொழி பதில்
      • நக்கீரன் கருத்துக் கணிப்பு முடிவுகள்
      • விஜயகாந்த்துக்கு எதிரான விமர்சனத்தை நிறுத்தப்போவதி...
      • வென்றாலும், தோற்றாலும் திமுகவுடன்தான்: திருமா
      • விஜயகாந்த்துடன் ஜெயலலிதா ஒரே மேடையில் பேச மறுப்பதற...
      • மதுரை கலெக்டர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்-...
      • பாமக குரங்கு: விஜயகாந்த் விளாசல்
      • குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு' :விஜயகாந்த்துக...
      • காங்கிரஸை இனி எந்தக் கட்சியும் அணுக கூடாது:சீமான்
      • மன்னராட்சி மலரும்: செந்தில் கிண்டல்
      • 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: மு.க.அழகிரி
      • ஜெ. தேர்தல் அறிக்கையை நம்பாதீர்கள்: குஷ்பு
      • சினிமாவில் போணியாகாத விஜயகாந்த்: வடிவேலு
      • அதிமுகவை ஆதரிக்க எதிர்ப்பு: விஜய் மக்கள் இயக்கம் க...
      • மனைவி மனு தள்ளுபடி ;காங்., வேட்பாளரானார் தங்கபாலு:...
      • போட்டி வேட்பாளர், அதிருப்தி சுழல்கள்...: வித்தியாச...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :அசினுக்கு கேரளா ஆனது...
      • இருக்கிற அரசியல்வாதிகளில் நான் யோக்கியமானவன்தான் :...
      • விஜயகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் பாய்ச்சல்
      • மனம் மாறினார் திவ்யா
      • நாசர் ரசித்து நடித்த படம்
      • கண்டேன் படத்திற்கு யு சான்று: ஏப்ரலில் ரிலீஸ்
      • பாமக தொகுதியில் குஷ்பு பிரசாரம் செய்தால் ராமதாஸ் ஒ...
      • கலைஞர் போட்டியிடும் தொகுதியில் ஜெ. பிரச்சாரம்
      • சும்மா கிசுகிசு பரப்பாதீங்க, உலகக் கோப்பை ஆட்டம் ப...
      • புரட்சியோடு புரட்சி இணைந்துள்ள மெகா வெற்றிக் கூட்ட...
      • வடிவேலுவை தொடர்ந்து விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்...
      • தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்
      • ஏன் வரவில்லை சாந்தி? வாலிப வயோதிக அன்பர்கள் அதிர்...
      • வானம் சூட்டிங்கில் சிம்புவுக்கு மீண்டும் காயம்
      • ஆவேச வடிவேலு.... அடடே பின்னணி!
      • உண்மையான தகவல்களை மறைத்ததாக ;மனைவி ஜெயந்தி மனு தள்...
      • வைகோ முடிவு துரதிர்ஷ்டவசமானது: இல.கணேசன்
      • ரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்! - ரஜினியின் அரச...
      • எந்நேரமும் கைது செய்யப்படலாம் வடிவேலு :தமிழக அரசிய...
      • சத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: சீம...
      • ஜெயலலிதாவால் வாக்கு கேட்க முடியவில்லை: ஸ்டாலின்
      • கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் ...
      • போயஸ்கார்டன் வீட்டை தானமாக வழங்குவாரா ஜெயலலிதா? ...
      • அதிமுகவின் சிப்பாயாக மாறிவிட்டார் விஜயகாந்த் : மத...
      • அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் விஜயகாந்த்: ராமதாஸ்
      • போன தேர்தல் அறிக்கை கதாநாயகன், இந்த தேர்தல் அறிக்க...
      • ஜெயலலிதாவுக்கு நன்மை செய்யும் மனசு வராது: குஷ்பு
      • நீ ஆம்பளயா இருந்தா... - விஜயகாந்தை விளாசும் வடிவேலு
      • அண்ணாவின் ஆவி கூறியதால்தான் அ.தி.மு.க., வுடன் கூட்...
      • பிரியாணி கொடுத்தால் பொறுக்க முடியாது-குரேஷி
      • ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்
      • கருணாநிதிக்கு செல்வி, ஸ்டாலினுக்கு துர்கா
      • அந்த அம்மாவுக்கு இப்பவே கண்ணை கட்டுது :வடிவேலு
      • சட்டப்படி குற்றம் பார்த்து விட்டு ஓட்டுப் போடுங்கள...
      • கன்னடத்திலும் விண்ணைத்தாண்டி வருவாயா
      • ஓவியாவுக்கு அடித்த ஜாக்பாட்
      • தமிழர்கள் மீது காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை; ஜெ.,
      • தேர்தல் செய்தி :பிணமா? பணமா? - மக்கள் குழப்பம்
      • கலைஞர் தந்த பரிசு! பிரசாந்த் பெருமிதம்!!
      • 63 தொகுதிகளிலும் தோற்கடிக்க காங்கிரசுக்கு எதிரான ய...
      • நடிகர் வடிவேலு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
      • ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடாதது ஏ...
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.