வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானோருக்கும் தமிழே தெரியாது என இலங்கை அதிபர் ராஜபக்ஷே குறைகூறியுள்ளார்.
இது குறித்து நாட்டு மக்களுக்கான தொலைக்காட்சி உரையில் அவர் மேலும் கூறுகையில், "புலம் பெயர் தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றவர்களுக்குத் தமிழே தெரியாது. அவர்கள் தமிழில் ஒரு வார்த்தையும் கூடப் பேசத் தெரியாதவர்கள் மட்டுமல்ல, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊர்களின் பெயர்களைக் கூட சரியாக அறியாதவர்கள்.
ஆனால், புலம்பெயர் தமிழர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள் எமது நாட்டுக்கு எதிரான தகவல்களைப் பரப்புவதில் முன்னிலை வகிக்கின்றனர். ஆயினும், அவர்களுக்கு தமிழில் ஒரு வார்த்தை கூட ஒழுங்காக பேச வராது.
அதேநேரத்தில், எமது நாட்டைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு சிலர் இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்தது கூட இல்லை. இன்னும் சிலரோ இங்கு அடிக்கடி வந்து போகவும் செய்கின்றார்கள். அவர்களின் பெரும்பாலான உறவினர்கள் இங்குதான் நன்றாக வாழ்கின்றார்கள்.
ஆயினும், அவர்கள் அநியாயமான முறையில் எமது நாட்டைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர்," என்று ராஜபக்ஷே தனது உரையில் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பல நாட்டு ராணுவங்களை சேர்த்துக்கொண்டு தாக்கியபோதும் புறமுதுகிட்டு ஓடாமல் வீர மரணம் அடைந்தவன்தான் தமிழன். ஆனால், சாதாரணமான பொதுமக்களாம் வெளிநாடு வாழ் தமிழனிடம் பயந்து ஓடிய அந்த நாட்களை மறக்க முடியுமா உன்னால்...? அதற்காகத்தான் இந்த்தனை பிதற்றலா....?

i am a original tamila. he said is true..
ReplyDeleteதமிழ் இல்லக்கணம் ஒன்னும் நீ கத்துதரவேண்டாம் நீ மனுசனா நடந்துக்கோ.................!!!!!!!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete@kamamSORRY
ReplyDelete