நட்பு - குடும்ப சென்டிமென்ட், தொட்டுக்கொள்ளாத காதல், லலல்லா பின்னணி இசை... உடனே விக்ரமன் நினைவுக்கு வருகிறாரா?
ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு இப்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார் விக்ரமன். படத்தின் பெயர் 'இளமை நாட்கள்'.
விக்ரமன் கடைசியாக இயக்கிய 'சென்னை காதல்' மற்றும் விஜயகாந்தின் 'மரியாதை' போன்ற படங்கள் அவருக்கு எந்த வகையிலும் கைகொடுக்கவில்லை.
எனவே இந்த முறை எவர்கிரீன் சப்ஜெக்டான ப்ளஸ்டூ மாணவர்களின் காதல், நட்பு, ஆசைகள் போன்றவற்றை மையப்படுத்தி இந்த இளமை நாட்களை உருவாக்குகிறார்.
நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. பெரும்பாலும் புதுமுகங்களை இந்தப் படத்தில் பயன்படுத்த முடிவு செய்துள்ளாராம்.
கந்தக்கோட்டை படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கிச்சா இளமை நாட்களுக்கும் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் கீ போர்டு பிளேயராக இருந்த பால்ராஜ் இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

No comments:
Post a Comment