தமிழ் சினிமாவில் ஹீரோயின் இல்லாமல் கூட ஹீரோக்கள் நடித்துவிடுவார்கள். ஆனால் வில்லன் இல்லாமல்! அதுவும் மதுரையை கதைகளமாக கொண்ட ஒரு படத்தில் வில்லன் இல்லையென்றால் எப்படி இருக்கும். நினைத்துக்கூட பார்க்கமுடியாத இந்த இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீபாலாஜி.
திருமலை, சுள்ளான், ஆதி ஆகியப்படங்களில் ரமணாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீபாலாஜி இயக்கும் குள்ளநரி கூட்டம் படத்தில்தான் இந்த வில்லன் கான்ஷப்ட்டை அகற்றியிருக்கிறார்கள். ஸ்ரீபாலாஜி பணியாற்றிய படங்களை வைத்துப்பார்த்தால் வில்லன் கேரக்டருக்காகவே ஒரு படத்தை இயக்கியிருக்கலாம், ஆனால் மனுஷன் இப்படி வில்லன் கேரக்டரே இல்லாத ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறாரே!
வெண்ணிலா கபடிக்குழு படமும் அதற்கு ஒருவகையில் காரணம் என்று சொல்லலாம். ரமணாவிடம் பணிபுரிந்த ஸ்ரீபாலாஜி, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். அப்படத்தின் வெற்றிதான் அவரை இதுபோன்ற ஒரு திரைக்கதையை உருவாக்கச் செய்திருக்கிறது.
'வெ.க' படத்தின் ஹீரோ விஷ்னுவையே இந்த படத்தின் ஹீரோவாக தேர்ந்தெடுத்த ஸ்ரீபாலாஜி, அப்படியே அதில் நடித்த மற்ற நடிகர்களையும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருக்கிறார். மேலும் தொழில்நுட்ப கலைஞர்களும் 'வெ.க' படத்தில் பணிபுரிந்தவர்கள்தான். இப்படி வெ.க படத்தின் சம்மந்தப்பட்டவர்கள் இந்த படத்தில் இருந்தாலும், படத்தை பொறுத்தவரையில் 'வெ.க' ன் சாயல் தெரியாதாம்.
இதெல்லாம் சரி, படத்தின் கதைகளம் மதுரையாச்சே என்று நாம் சிறிது யோசித்தால் அங்கேயும் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் இயக்குநர், நான் பிறந்து வளர்ந்தது மதுரை, அதனால்தான் நான் மதுரையை கதைகளமாக தேர்ந்தெடுத்தேன். இப்போது வரும் படங்களில் காட்டும் மதுரை மதுரையே அல்ல, நானும் அதைபற்றி யோசித்துதான் இருக்கிறேன். மதுரையில் வாழும் ஒரு நடுத்தர மனிதன் எப்படி வாழ்கிறானோ அப்படித்தான் என் படத்தின் ஹீரோ இருப்பார். மற்றபடி கத்தியும் கையுமாக, மதுரை பாஷயை பேசிகொண்டு ரசிகர்களை அறுக்க மாட்டார். அதே போல இப்போது உள்ள படங்களின் இறுதிக் காட்சியில் வருவதுபோன்ற ஒரு சோகமான முடிவும் என் படத்தில் இருக்காது. படம் பார்க்கும் ரசிகர்கள் ஜாலியாக இருக்கும்படியாகத்தான் இருக்கும்" என்று தனது படத்திற்கு கேரண்ன்டி தருகிறார் இயக்குநர் ஸ்ரீபாலாஜி.

ur blogspot is different and nice...all the best
ReplyDelete