மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 18 வருடங்கள் மேல்சபை எம்.பி.யாக பொறுப்பு வகித்துள்ளார். பின்னர் சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் வைகோவை வேட்பாளராக நிறுத்த கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விரும்புகின்றனர். கடந்த 1996 சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. தனித்து நின்ற போது மட்டும் வைகோ விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டார். அதில் அவர் எம்எல்ஏ-ஆக தேர்வாகவில்லை. சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.
இந்த முறை அவரை எம்எல்ஏ-ஆக்க சட்டமன்றத்துக்கு அனுப்ப கட்சியினர் தீவிரம் காட்டுகிறார்கள். சாத்தூர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. அத்தொகுதியில் இப்போதே ம.தி.மு.க.வினர் வைகோ பெயரை சுவர் விளம்பரங்களில் எழுத ஆரம்பித்துள்ளனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சாத்தூர் ராமச்சந்திரன் வென்றார். அவர் தி.மு.க. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment